ஆந்திராவில் நெடுஞ்சாலையோரம் நின்றிருந்த லாரியின் பின்பக்கம் அதிவேகமாக வந்து மோதிய கார் சுக்குநூறாக நொறுங்கியதில், ஒரு குழந்தை உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
விஜயவாடாவைச் சேர்ந்த அந்தக் குடும்பத்தினர் 8 பேர், ஹைதராபாத்தில் நடைபெற்ற திருமண நிகழ்வில் பங்கேற்றுவிட்டு, காரில் சொந்த ஊர் திரும்பிக் கொண்டிருந்த போது விபத்து நேரிட்டது.
காரை ஓட்டி வந்தவர் தூக்கக் கலக்கத்தில் இருந்ததாகக் கூறப்படும் நிலையில், நல்லஜார்லா என்ற இடத்தின் அருகே நெடுஞ்சாலையோரம் நின்றிருந்த லாரியின் பின்னால் பயங்கரமாக மோதியது.
இதில் காரில் வந்தவர்களில் 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஒருவர் படுகாயங்களுடன் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.