சேலம் பட்டாசு கிடங்கு வெடி விபத்தில் படுகாயமடைந்த 6 பேரும் உயிரிழப்பு.!!
கடந்த ஜூன் ஒன்றாம் தேதி சேலம் மாவட்டத்தில் உள்ள இரும்பாலையை அடுத்த எஸ்.கொல்லப்பட்டி பகுதியில் அமைந்துள்ள பட்டாசுக் கிடங்கில் திடீரென தீ விபத்து ஏற்பட்டு சிறிது நேரத்தில் பயங்கர சத்தத்துடன் பட்டாசுகள் வெடித்துச் சிதறியது. இந்த வெடிவிபத்து காரணமாக கட்டடம் முழுவதும் தரைமட்டமானது.
இந்த விபத்து நேரத்தில் கிடங்கில் பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டிருந்த 9 பேரும் படுகாயமடைந்து கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கினா். இதுகுறித்து தகவலறிந்த தீயணைப்பு வீரா்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனா்.
அதற்குள், வெடி விபத்தில் 3 போ் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனா். மேலும் படுகாயம் அடைந்த 6 போ் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் மூன்று பேர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனா்.
இந்த நிலையில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் மூன்று பெரும் கடந்த இரண்டு நாட்களில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த வெடி விபத்தில் சம்பவத்தன்று உயிரிழந்த மூன்று பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 3 லட்சமும், தீக்காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் 6 பேருக்கு தலா ரூ. 50 ஆயிரம் முதல்வா் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளாா். இந்த நிலையில் தற்போது அனைவரும் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.