சென்னை: தமிழர் பிரதமர் ஆக வேண்டும் என்று அமித்ஷா கூறியது மகிழ்ச்சி தான் என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், தமிழரை பிரதமராக்குவோம் என்ற அமித்ஷாவின் அறிவிப்பு மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால் அதன் உள்நோக்கம் புரியவில்லை என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர், குறுகிய காலத்தில் 1.5 லட்சம் இலவச மின் இணைப்புகள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது என்றும், நடப்பாண்டில் ரூ.75.90 கோடியில் குறுவை சாகுபடி தொகுப்பு திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் கூறினார்.