தமிழர் பிரதமர்… யாரை சொல்கிறது பாஜக? 2024 தேர்தல் கணக்கும், தமிழ் சென்டிமென்ட்டும்!

தமிழர் ஒருவர் பிரதமரா வர வேண்டுமா? அப்படினா லிஸ்ட் எடுங்க. ஒரு கை பார்த்துவிடலாம் எனப் பலரும் சமூக வலைதளங்களில் தீயாய் பதிவுகளை தெறிக்க விட்டு வருகின்றனர். பாஜக மேலிடம் தேர்வு செய்யும் பட்டியலில் முன்னிலை பெறுபவர்கள் யார் என்று பார்த்தால் நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கர் ஆகியோரை சொல்லலாம் என்கின்றனர். ஏனெனில் டெல்லி எதிர்பார்க்கும் அரசியல் லாபி வட்டத்திற்குள் இடம்பெறக் கூடியவர்கள் இவர்கள் தானாம்.

தி.மு.க-வின் குடும்ப ஆட்சியை விமர்சிக்கும் அமித்ஷா

லிஸ்டில் இருக்கும் பெருந்தலைகள்

அதேசமயம் பொன்.ராதாகிருஷ்ணன், எல்.முருகன் போன்றோருக்கு வாய்ப்புகள் இல்லை எனக் கூறுகின்றனர். பாஜகவின் முக்கியமான பெருந்தலைகளாக இருந்த இல.கணேசன், சி.பி.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோருக்கு ஆளுநர் பதவி கொடுத்து ரூட்டை திருப்பி விட்டு விட்டனர். முன்னதாக தென்சென்னையில் நேற்று நடந்த பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தமிழர் ஒருவர் பிரதமர் வர வேண்டும் எனப் பேசியதாக தகவல்கள் வெளியாகின.

அமித் ஷா பேசியது என்ன?

ஆனால் இது முற்றிலும் முரணான விஷயம் என்பது கண்கூடாகத் தெரிகிறது. முதலில் அமித் ஷா அப்படி பேசினாரா? என்பதை உறுதி செய்ய வேண்டும். இரண்டாவது, 2024 மக்களவை தேர்தலுக்கு இன்னும் ஓராண்டுக்கு குறைவான நாட்களே இருக்கின்றன. அதில் பிரதமர் மோடி தலைமையில் ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்ய பாஜக தீவிரம் காட்டி கொண்டிருக்கிறது.

தமிழர் பிரதமராக வர வேண்டுமா?

மோடி அலை என்ற விஷயத்தை டெல்லி நிச்சயம் கையிலெடுக்கும் என்று அரசியல் விமர்சகர்கள் உறுதியாக கூறுகின்றனர். மோடி அலையின் செல்வாக்கு வேண்டுமானால் மாநிலங்களுக்கு ஏற்ப மாறுபடலாம். அதை வைத்து அரசியல் செய்வதை மட்டும் தவிர்க்க இயலாது. இப்படிப்பட்ட சூழலில் தமிழர் ஒருவர் பிரதமர் என்ற விஷயத்தை அடுத்து வரும் தேர்தலுடன் தான் பொருத்தி பார்க்க வேண்டியுள்ளது.

ஸ்டாலின் பதிலடி

அப்படியெனில் பிரதமராக மோடி வருவதை அமித் ஷா விரும்பவில்லையா? என எண்ணத் தோன்றுகிறது. இதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சுட்டிக் காட்டி பேசுகையில், மோடி மீது அமித் ஷாவிற்கு என்ன கோபம் என்று தெரியவில்லை. தமிழகத்தில் இருந்து பிரதமர் வர வேண்டும் என்று கூறுவதாக குறிப்பிட்டுள்ளார்.

உள்குத்து வேலையா?

இல்லையெனில் மோடியை ராமநாதபுரம் மக்களவை தொகுதியில் நிறுத்தி தமிழகத்தில் இருந்து ஒருவர் பிரதமராக வேண்டும் என்று தான் சொன்னோம். தமிழர் என்று சொல்லவில்லை என பிளேட்டை திருப்பி விடுவார்களா? என்ற கேள்வியும் எழுகிறது. ஒட்டுமொத்தமாக தமிழ், தமிழர் என பாசாங்கு செய்து வாக்கு வங்கி அரசியலுக்கு அடிபோடும் வேலையை பாஜக செய்கிறது. அதன் வெளிப்பாடு தான் அமித் ஷாவின் பேச்சு என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.