ATUL INDIA MOVIES சார்பில் தயாரிப்பாளர் அதுல் M போஸ்மியா வழங்கும், இயக்குநர் ஜேபி இயக்கத்தில், தான்யா ரவிச்சந்திரன் நடிப்பில், உருவாகும் புதிய படம் “BP180”. இப்படத்தின் பூஜை, படக்குழுவினர் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் இன்று இனிதே நடைபெற்றது.
இவ்விழாவினில் தயாரிப்பாளர் அதுல் M போஸ்மியா பேசியதாவது…
இது எங்கள் முதல் தயாரிப்பு, குஜராத்திலிருந்து இங்கு நம்பிக்கையுடன் வந்துள்ளோம். மிகச்சிறந்த திரைப்பட குழுவினர் இப்படத்தை உருவாக்கவுள்ளனர். உங்கள் ஆதரவை தாருங்கள் நன்றி.
இசையமைப்பாளர் ஜிப்ரான் பேசியதாவது…
அதுல் சார், ராட்சசன் பார்த்துவிட்டு ஒரு படம் பண்ணலாம் என்றார். இயக்குநர் ஜேபியை என்னிடம் அனுப்பினார் அவர் கதை சொல்லச் சொல்ல, மிக அட்டகாசமாக இருந்தது. இந்தக்கதைக்குப் பொருத்தமான டைட்டில் இது தான், படம் இப்போது தான் துவங்கியுள்ளோம், முடிந்தபிறகு இன்னும் நிறையப் பேசலாம் நன்றி.
நடிகை நைனி சாவி பேசியதாவது…
எனக்கு இந்தவாய்ப்பு தந்ததற்கு ஜேபி சார் மற்றும் படக்குழுவிற்கு நன்றி. படத்தை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன். படத்திற்கு ஆதரவு தாருங்கள்.
நடிகர் அருள்தாஸ் பேசியதாவது,
வெளி மாநிலத்திலிருந்து இங்குப் படம் தயாரிக்க வந்துள்ள, தாயரிப்பாளர் அதுல் அவர்களுக்கு வாழ்த்துகள், படத்தின் கதையைக் கேட்டேன், படம் ஆக்சன் படமாக இருக்கும், பாக்யராஜ் சார் ஒரு அற்புதமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார், படம் நன்றாக வரும் என நம்புகிறேன் அனைவருக்கும் வாழ்த்துகள் நன்றி.
நடிகர் டேனியல் பாலாஜி பேசியதாவது…
என்னை எப்படி இந்தப்படத்திற்குத் தேர்ந்தெடுத்தார்கள் என்று தெரியவில்லை, இந்தக்கதை பெண் கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டது என் கதாபாத்திரமும் முக்கியத்துவம் வாய்ந்தது, உங்களுக்குப் பிடிக்குமாறு படம் செய்வோம் அனைவரும் ஆதரவு தாருங்கள் நன்றி.
நடிகை தான்யா ரவிச்சந்திரன் பேசியதாவது…
இந்தப்படம் எனக்கு மிகப் புதுமையான ரோல், க்ரைம் திரில்லர் கதை. ஜேபி சார் இயக்கத்தில் நடிக்க ஆவலுடன் காத்திருக்கிறேன். இந்தப்படம் ரசிகர்களுக்குப் புதுமையாக இருக்கும். அனைவரும் ஆதரவு தாருங்கள் நன்றி.
இயக்குநர் கே பாக்யராஜ் பேசியதாவது…
தயாரிப்பாளர் வெளி மாநிலத்திலிருந்து வந்து முதன் முறையாகப் படமெடுக்கிறார். இயக்குநர் ஜேபி இப்படத்தில் அறிமுகமாகிறார், இந்த குழுவிற்கு என் வாழ்த்துக்கள். தயாரிப்பாளர் இந்தக்கதையை 40 கதைகள் கேட்டு பின் இந்தக்கதையை ஓகே செய்துள்ளார். இந்தப்படத்தில் தான்யா, டேனியல் பாலாஜி, ஜிப்ரான் மூன்று பேருக்கும் தான் நிறைய வேலை இருக்கிறது. கதை மிக திரில்லாக இருந்தது. கதை சொல்லும் போது ஒரு டைட்டில் சொன்னார் ஆனால் இப்போது வைத்திருக்கும் டைட்டில் தான் இந்தப்படத்திற்குப் பொருத்தமான டைட்டில். மிஷ்கின் பேரைக் காப்பாற்றும் வகையில் இப்படத்தைச் சிறப்பாக இயக்குவார் ஜேபி. படம் மிகச் சிறப்பாக வரும் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள் நன்றி.
இயக்குநர் ஜே பி பேசியதாவது..,
இங்கு வந்துள்ள அனைவருக்கும் நன்றி, எனக்கு இது முதல் மேடை என்பதால் கொஞ்சம் பதட்டமாக இருக்கிறது, நான் மிஷ்கின் சாரின் மாணவன் “அஞ்சாதே” படத்திலிருந்து நான் அவருடன் பயணம் செய்துள்ளேன். ஆடியோ விழாவிற்கு வருவதாகக் கூறியுள்ளார். அவரது பெயரைக் காப்பாற்றுவேன். இந்த படத்தை பெரும் பொறுப்போடு செய்வேன். இதன் மதிப்பு எனக்குத் தெரியும் இப்படத்தைத் தயாரிக்கும் அதுல் சாருக்கு நன்றி. உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி.