ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே பயணிகள் வேனும், பால் வேனும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் இரு பக்தர்கள் உயிரிழந்தனர்.
திருப்பதியில் இருந்து அஞ்சேரம்மா கோயில் நோக்கி பக்தர்கள் குழுவினர் சென்று கொண்டிருந்தனர். அப்போது புத்தூரில் இருந்து திருப்பதி நோக்கிச் சென்ற பால் வேன், வடமலைப் பேட்டை என்ற இடத்தில் பக்தர்கள் வேனுடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் இருவர் உயிரிழந்ததாகவும், 9 பேர் படுகாயமடைந்துள்ளனர்..