ஒரே நாளில் 24 சீன போர் விமானங்கள் தங்கள் வான் எல்லைக்குள் அத்துமீறிப் பறந்ததாக தைவான் குற்றம் சாட்டி உள்ளது.
இதுகுறித்து தைவான் பாதுகாப்பு அமைச்சகம் விடுத்துள்ள அறிக்கையில், ஞாயிற்றுக்கிழமை சீனாவின் J-10, J-11, J-16, Su-30 ஆகிய போர் விமானங்கள் மற்றும் ஹெச் 6 குண்டு வீச்சு விமானங்கள் தங்கள் வான் எல்லைக்குள் அத்துமீறிப் பறந்தாகத் தெரிவித்துள்ளது.
மேலும் அத்துமீறும் சீன விமானங்களைக் கண்காணிப்பதற்காக போர் கப்பல்கள் மற்றும் நிலத்திலிருந்து ஏவக்கூடிய ஏவுகணை அமைப்புகளையும் தைவான் நீரிணைப் பகுதிக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும், மேலும், ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும், தைவான் குறிப்பிட்டுள்ளது.