இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில் கைபர் பக்தூங்வா மாகாணம் அமைந்துள்ளது. கடந்த சில நாட்களாக அந்த மாகாணத்தில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது.
பானு, திகான், லக்கி மார்வாட், கராக் ஆகிய 4 மாவட்டங்களில் வீடு, சுவர், மரம் விழுந்து இதுவரை 34 பேர் உயிரிழந்துள்ளனர். 147 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். 200 கால்நடைகள் உயிரிழந்துள்ளன. 100-க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்துள்ளன.
நிவாரண பணிகளை மேற்கொள்ள கைபர் பக்தூங்வா மாகாண அரசு சார்பில் ரூ.4 கோடி (இந்திய மதிப்பில் ரூ.1.15 கோடி) நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. பலத்த மழையுடன் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் கைபர் பக்தூங்வா மாகாணம் முழுவதும் அவசர நிலை பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
பாகிஸ்தானில் ஜூன் முதல் செப்டம்பர் வரை பருவமழை காலமாகும். கடந்த ஆண்டு பெய்த வரலாறு காணாத மழையால் 1,700 பேர் உயிரி ழந்தனர். இதனால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.