சென்னை வில்லிவாக்கத்தை சேர்ந்தவர் நாராயணி என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரட்டூர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அந்த புகாரில் கொரட்டூரில் உள்ள தனது பூர்வீக நிலம் 78 செண்ட் விற்பதற்காக நண்பர் சதீஷ் மற்றும் இடைத்தரகர் பிரகாஷ்ராஜ் ஆகியோரை அணுகினேன்.
சுமார் 5 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை விற்பதில் சில நடைமுறை சிக்கல் இருந்ததால் அதை தீர்த்து வைத்து இடத்தை விற்பனை செய்து கொடுக்க வேண்டும் என்பதற்காக கமிஷன் அடிப்படையில் பாஜக நெசவாளர் அணி மாநில செயலாளர் மின்ட் ரமேஷை அணுகினோம். .
ஆனால் அவரால் நிலத்தை சொன்னப்படி விற்பனை செய்ய முடியவில்லை. இதனால் வேறு ஒருவர் மூலம் நிலத்தை விற்பனை செய்து விட்ட்டேன். அதற்கு தனது கூட்டாளி நாகர்கோயில் மகேஷ் என்பவருடன் வீட்டிற்கு வந்த மின்ட் ரமேஷ் என்னை மிரட்டி 1.2 கோடி ரூபாய் பறித்து சென்றார்” என அந்த புகாரில் தெரிவித்திருந்தார். மேலும் இது குறித்து போலீசில் புகார் கொடுத்தால் கொலை செய்து விடுவதாக மிரட்டியதாகவும் அந்த புகாரில் தெரிவித்துள்ளார்.
அதே வேளையில் தரகர் பிரகாஷ்ராஜ் கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரட்டூர் காவல் நிலையத்தில் வேறு ஒரு புகாரில் மின்ட் ரமேஷ், அவருடைய கூட்டாளி நாகர் கோயில் மகேஷ் இருவரும் கொலை மிரட்டல் செய்ததாக தெரிவித்திருந்தார். இந்த இரண்டு புகாரின் பேரில் கொரட்டூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர்.
இந்த நிலையில் மின்ட் ரமேஷின் மகனின் திருமணத்திற்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கலந்து கொண்ட போது திருமணம் முடியும் வரை காத்திருந்த போலீசார் மின்ட் ரமேஷ் மற்றும் அவருடைய கூட்டாளி மகேஷ் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில் மின்ட் ரமேஷ் மற்றும் அவருடைய கூட்டாளி மகேஷ் ஆகியோர் குண்டர் சட்டத்தில் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆவடி காவல் ஆணையர் அருண் பரிந்துரையின் பெயரில் மின்ட் ரமேஷ் மற்றும் மகேஷ் ஆகியோர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Ramesh @ Mint ramesh and his associate Mahesh @ Lifer mahesh who involved in “#katta_panchayat” and #rowdyism are detained under Act 14 of 1982-(#Goondas Act)
Law always stand with aggrieved and victims.
A. Arun, IPS.,
Commissioner of Police, Avadi@ArunIPSCOP@vijaypnpa_ips— Avadi Police Commissionerate (@avadipolice) June 12, 2023