2023ஆம் வருடத்திற்காக அரசாங்க பாடசாலைகள் மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளில் முதலாம் தவணையின் மூன்றாம் கட்டம் 12ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பிக்கப்பட்டது.
தற்போது காலநிலை காரணமாக டெங்கு எச்சரிக்கையைக் கருத்திற்கொண்டு இன்று (12) மற்றும் நாளை (13) டெங்கு ஒழிப்பு நிகழ்ச்சித் திட்டத்தை சகல மாகாணங்களையும் உள்ளடக்கியதாக பாடசாலை சமூகத்தின் ஆதரவுடன் நாடு பூராகவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மூடப்பட்டிருந்த பாடசாலைகளில் நீர் தேங்கியுள்ள மற்றும் கழிவு நீர் வழிந்தோடும் காண்கள், குப்பைகளை சேகரித்து நுளம்பு பெருகக் கூடிய இடங்களை அகற்ற வேண்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கொழும்பு நகரில் 144 பாடசாலைகளை உள்ளடக்கியதாக டெங்கு ஒழிப்பு நிகழ்ச்சிகள் இன்றும் நாளையும் நடைபெறவுள்ளன.
மட்டக்களப்பு மாவட்டத்தின் ஐந்து கல்வி வலயங்களிலும் சகல பாடசாலைகளும் மும்முரமாக இன்று ஆசிரியர்களின் வருகையுடன் தமது கல்வி நடவடிக்கைகளை ஆரம்பித்ததுடன் மாணவர்களின் வருகையும் வரவேற்கத்தக்கதாகக் காணப்பட்டது.