அதி தீவிர பிபோர்ஜோய் புயலால் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ள பகுதி மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அதிகாரிகளுக்கு பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.
புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக டெல்லியில் பிரதமர் ஆலோசனை மேற்கொண்டார். அதில், உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் பல்வேறு துறைகளின் உயரதிகாரிகள் பங்கேற்றனர். குஜராத்தின் கடற்கரையோர மாவட்டங்களில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் தொடர்பாகவும், தயார் நிலை குறித்தும் பிரதமர் அவர்களிடம் கேட்டறிந்தார்.
புயலால் மின்சாரம், தொலைதொடர்பு, குடிநீர் போன்ற அத்தியாவசிய சேவைகள் பாதிக்கப்பட்டால் உடனடியாக சீரமைக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முடுக்கிவிடுமாறும் பிரதமர் அறிவுறுத்தினார். இதனிடையே, புயல் நிலைமையை மத்திய உள்துறை அமைச்சகம் 24 மணிநேரமும் கண்காணித்து வருவதாக பிரதமர் அலுவலகம் கூறியுள்ளது.