புதுடெல்லி,
தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் உருவான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி பிபோர்ஜாய் புயலாக உருவெடுத்துள்ளது. தற்போது இந்த புயலானது துவாரகாவுக்கு தெற்கு-தென்மேற்கில் 380 கிமீ தொலைவில் நிலைகொண்டுள்ளது.
இது அதிதீவிர புயலாக வலுப்பெற்று ஜூன் 15ஆம் தேதி நண்பகல் குஜராத்தின் மான்ட்வி-பாகிஸ்தானின் கராச்சி இடையே சவுராஷ்டிரா, கட்ச் பகுதியில் கரையைக் கடக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து குஜராத்தில் அரசு சார்பில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், பிபோர்ஜாய் புயல் எதிரொலியாக குஜராத்தின் கட்ச் வளைகுடா கடலோரப் பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறபிக்கப்பட்டுள்ளது. புயல் கரையை கடக்கும் வரை பள்ளிகள் மூடப்படும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் 15-ம் தேதி புயல் கரையைக் கடக்கக் கூடும் என்பதால், ஜூன் 16 வரை கட்ச் வளைகுடா கடலோரப் பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறபிக்கப்பட்டுள்ளது.