வாரணாசி: இந்திய வெளியுறவு கொள்கையின் நோக்கங்கள் மற்றும் சிறப்பம்சங்கள் குறித்த கருத்தரங்கம் உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள காந்தி அத்யாயன் பீடம் சபாவில் நேற்று நடந்தது.
இதில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் பேசும்போது, ‘‘பிரதமர் மோடி அரசு 9 ஆண்டுகளை நிறைவு செய்யும் வேளையில் நான் இந்நிகழ்ச்சிக்கு வந்துள்ளேன். பிரச்சினைகளை சந்திக்கும் போதெல்லாம் நாம் நமது நாட்டை நம்பலாம். உக்ரைனில் பிரச்சினை ஏற்பட்ட போது, அங்கிருந்த இந்தியர்கள் தாய் நாடு அழைத்து வரப்பட்டனர். சூடானில் பிரச்சினை ஏற்பட்டபோது, இந்தியர்கள் அழைத்துவரப்பட்டனர். நேபாளில் பூகம்பம் ஏற்பட்ட போதும், மியான்மரில் புயல் வீசியபோதும் இந்தியா உதவிக் கரம் நீட்டியது’’ என்றார்.