மும்பையின் தாராவி பகுதியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் தீ விபத்து ஏற்பட்டது.
இதில் குழந்தைகள் உட்பட 32 பேர் காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மிகப்பெரிய குடிசைப் பகுதியான தாராவியில் சில பெரிய கட்டடங்களும் உள்ளன.
அவ்வாறுஉள்ள பெரிய அடுக்குமாடிக் குடியிருப்பில் தீப் பிடித்தது. தீயணைப்பு படையினர் துரிதமாக செயல்பட்டு அனைவரையும் பத்திரமாக மீட்டனர்.
32 பேருக்கு மூச்சுத்திணறல் மற்றும் தீக்காயங்கள் ஏற்பட்டதையடுத்து அவர்கள் மருத்துவ சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டனர்