மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா குறுவை சாகுபடிக்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தண்ணீரை திறந்து வைத்தார்.
மின்விசையை அவர் இயக்கியதும் அணையின் வலது கரை மேல்மட்ட மதகுகள் வழியே காவிரி பெருக்கெடுத்து பாய்ந்து சென்றது. அணையிலிருந்து வெளியேறிய நீரை முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் மலர்களை தூவி வரவேற்றனர்.
மேட்டூர் அணையிலிருந்து திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு படிப்படியாக அதிகரிக்கப்பட்டு தற்போது விநாடிக்கு 10 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டது. தேவைக்கேற்ப நீர் திறப்பு அளவு மாற்றியமைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
தண்ணீர் திறப்பால் சேலம், நாமக்கல், கரூர், ஈரோடு, திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட்ட 12 மாவட்டங்கள் பாசன வசதி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.