தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் பிரதமராக வர வேண்டும் என்ற அமித்ஷாவின் கருத்துக்கு பதிலளித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “மோடி மீது அமித்ஷாவுக்கு என்ன கோபம் என தெரியவில்லை” என்று கூறியுள்ளார். மேட்டூர் அணையை திறந்துவைத்த பின் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “பாஜக ஆட்சியில் எந்த திட்டமும் தமிழ்நாட்டுக்கு வரவில்லை. காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது கூட்டணியில் இருந்த திமுக என்னென்ன திட்டங்கள் கொண்டு வந்தோம் என நாங்கள் கொடுத்த பட்டியலை முழுமையாக படிக்கவில்லையா? பாஜக-வின் 9 ஆண்டு ஆட்சியில் எந்த […]