123 மாடி கட்டிடத்தில் ஏற முயன்ற பிரிட்டன் இளைஞர்… கயிறு இல்லாமல் வெறும் கைகளால் ஏறியதால் தடுத்து நிறுத்திய தீயணைப்பு படையினர்…!

தென்கொரிய தலைநகர் சியோலில் உள்ள உலகின் 6வது மிகப்பெரிய கட்டிடமான 123 மாடி கோபுரத்தில் கயிறு இல்லாமல் ஏற முயன்ற பிரிட்டன் இளைஞரை பாதியில் தீயணைப்பு படையினர் தடுத்து நிறுத்தினர்.

Lotte World Tower கட்டிடத்தின் மீது 24 வயதான George King-Thompson ஏறினார். கயிற்றின் உதவி இல்லாமல் வெறும் கைகளால் அவர் ஏறியதால், 73வது தளத்தில் தடுத்து நிறுத்தி பராமரிப்பு பாதை வழியாக வெளியே அழைத்து வந்தனர்.

பின்னர் போலீசாரிடம் அவரை தீயணைப்பு படையினர் ஒப்படைத்தனர். ஜார்ஜ் கிங் இதற்கு முன் 2019ம் ஆண்டில் லண்டனில் உள்ள 72 மாடிகளை கொண்ட Shard கட்டிடத்தில் ஏறிய போது ஏற்கனவே கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.