2000 ரூபாய் நோட்டுக்கு 15 சதவீதம் கமிஷன் தருவதாக ரூ 1.27 கோடி அபேஸ்…. மொத்தமா போச்சி… தவிக்கும் வியாபாரி…!

2000 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை 500 ரூபாய் நோட்டுக்களாக மாற்றித்தந்தால் 15 சதவீதம் கமிஷன் தருவதாக ஆசை காண்பித்து, கோவை நகை வியாபாரியிடம் 1 கோடியே 27 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 500 ரூபாய் நோட்டுக்களை பறித்துக் கொண்டு ஓடிய பெண் ரியல் எஸ்டேட் புரோக்கர் உள்ளிட்ட 6 பேர் கும்பலை போலீசார் கைது செய்தனர்

கட்டு கட்டுக்களாக அடுக்கி வைக்கப்பட்டுள்ள இந்த 500 ரூபாய் நோட்டுக்களை காரில் வந்து அள்ளிச்சென்ற அபேஸ் கும்பல் இவர்கள் தான்..!

கோவை மாவட்டம் தெலுங்குபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பிரகாஷ். இவர் பெரிய கடை வீதியில் தங்க நகைகளை வாங்கி விற்கும் தொழில் செய்து வருகிறார். பிரகாஷிற்கு தனியார் வங்கியில் வேலை பார்க்கும் வேதா சங்கர் என்பவர் மூலம் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் குட்டி என்கிற சின்ன குட்டி என்பவர் அறிமுகம் ஆகியுள்ளார்.

தனக்கு தெரிந்த ஒரு நபரிடம் 2000 ரூபாய் நோட்டுகள் கோடிக்கணக்கில் உள்ளதாகவும், அதனை மாற்றிக் கொடுகத்தால் ஒரு கோடி ரூபாய்க்கு 15 சதவீத கமிஷன் தருவதாக பிரகாஷிடம், சின்னக்குட்டி ஆசைகாட்டியுள்ளார். அதன்படி நிலக்கோட்டை பகுதியைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் புரோக்கர் மீனா ,தேனி ‘வெட்டு’ பாண்டியன், அழகர்சாமி, சௌமியன், கருவேலநாயக்கன்பட்டி கவாஸ்கர் ஆகியோரை அழைத்து வந்த சின்ன குட்டி காரமடையில் உள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் பிரகாஷை சந்திக்க வைத்து 2 ஆயிரம் நோட்டுகள் அதிகம் இருப்பதாக ஒரு வீடியோவை காண்பித்து கமிஷன் தொடர்பாக பேசி உள்ளனர். தங்களிடம் உள்ள 2000 ரூபாய் நோட்டுகளுக்கு இணையாக 500 ரூபாய் நோட்டுகளை கொண்டு வருமாறு கூறியுள்ளனர்.

15 சதவீத கமிஷன் கிடைக்கின்றது என்ற ஆசையில் பிரகாஷ் 500 ரூபாய் நோட்டுக்கட்டுகளாக , ஒரு கோடியே 27 லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாயை ஒரு பையில் போட்டு எடுத்துக்கொண்டு சென்றுள்ளார். அம்பராம்பாளையம் அருகே மூன்று கார்களின் வந்த மீனா தலைமையிலான கும்பல், பிரகாஷிடம் , நீங்கள் கொண்டு வந்துள்ள 500 ரூபாய் நோட்டு கட்டுகளை பார்த்தால் தான் 2000 ரூபாய் நோட்டுக்களை தருவோம் எனக் கூறி உள்ளனர்.

பணத்தை பார்ப்பது போல நடித்து பிரகாஷிடம் இருந்த ஒரு கோடியே 27 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணத்தையும், 20,000 மதிப்புள்ள பணம் என்னும் இயந்திரத்தையும் மிரட்டி எடுத்துக்கொண்டு கார்களில் ஏறி தப்பிச்சென்றதால் பிரகாஷ் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து ஆனைமலை காவல் நிலையத்தில் பிரகாஷ் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் . பணத்துடன் தப்பிய அபேஸ் கும்பலை காரின் வாகனத்தின் பதிவு எண்களை கொண்டு விசாரணை மேற்கொண்டு 12 மணி நேரத்தில் ஆறு பேரையும் மடக்கிப்பிடித்து கைது செய்ததோடு மொத்த பணத்தையும் மீட்டதாக காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் தெரிவித்தார்

பிரகாஷ் கொண்டு வந்த மொத்த பணத்துக்கு உண்டான கணக்குகளை கேட்டுள்ளதாகவும், அது கருப்பு பணமாக இருந்தால் வருமானவரித்துறை விசாரணைக்கு ஒப்படைக்கப்படும் என்றார். கமிஷன் ஆசையில் மொத்த பணத்தையும் அள்ளிக் கொடுத்து விட்டு கிடைக்குமா ? கிடைக்காதா ? என்று நகைவியாபாரி பிரகாஷ் தவித்து வருகின்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.