இஸ்லாமாபாத்,-பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பயணியர் வாகனம் பள்ளத்தாக்கில் கவிழ்ந்ததில், ஒன்பது பேர் பலியாகினர்; 18 பேர் காயமடைந்தனர்.
நம் அண்டை நாடான பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில், பயணியர் வாகனம் ஒன்று நேற்று விபத்துக்குள்ளாகியது. இங்கு, பஞ்சாப் மாகாணத்தில் உள்ள வழிபாட்டுத் தலத்தில் நடந்த திருவிழாவில் பங்கேற்க சுத்நோட்டி மாவட்டத்தின் நைரியான் கிராமத்தைச் சேர்ந்த 25க்கும் மேற்பட்டோர் வாகனம் ஒன்றில் நேற்று சென்றனர்.
இந்த வாகனம், மிர்பூர் நகர எல்லையில் ஜராய் கிராமம் அருகே சென்றபோது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து அருகிலிருந்த பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது.
இந்த விபத்தில் ஒன்பது பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்; 18 பேர் காயமடைந்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement