Ajith- Vijay: விஜய்யின் அந்த பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும்..ஓப்பனாக பாராட்டிய அஜித்..இதுவரை வெளிவராத தகவல்..!

இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள்

​அஜித்தின் விடாமுயற்சிஅஜித்தின் விடாமுயற்சி திரைப்படத்தை மகிழ் திருமேனி இயக்கவுள்ளார். என்னதான் இப்படத்தின் டைட்டிலுக்கு பல கலவையான விமர்சனங்கள் வந்தாலும் அஜித்திற்கு ஏற்ற டைட்டிலாக தான் இருக்கின்றது என்பதே பலரது கருத்தாக இருக்கின்றது. தற்போது இப்படத்தின் ப்ரீ ப்ரொடக்ஷன் வேலைகளில் தீவிரமாக மகிழ் திருமேனி மற்றும் அஜித் இறங்கியுள்ளனர். லைக்காவின் தயாரிப்பில் அனிருத்தின் இசையில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதைப்பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் சில தினங்களில் படக்குழு வெளியிடும் எனவும் எதிர்பார்க்கப்பட்டு வருகின்றது

​சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த அஜித்மே மாதம் இறுதியிலேயே விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு துவங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் திடீரென தயாரிப்பு நிறுவனம் ரெய்டில் சிக்கியதால் படப்பிடிப்பு துவங்க தாமதமாகி வருவதாக தெரிகின்றது. இதைத்தொடர்ந்து லைக்கா நிறுவனத்திடம் இருந்து விடாமுயற்சி படம் கைமாற இருப்பதாகவும், இப்படம் ட்ராப்பாகும் வாய்ப்பிருப்பதாகவும் பல வதந்திகள் பரவி வந்தன ஆனால் அதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அஜித் மற்றும் மகிழ் திருமேனி இருவரும் படத்தின் ப்ரீ ப்ரொடக்ஷன் வேலைகளுக்காக லண்டனுக்கு சென்ற தகவல் பரவியது. இதன் மூலம் இப்படம் கண்டிப்பாக நடக்கும் என உறுதியாகியுள்ளது

​அஜித் – விஜய் போட்டிகடந்த பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அஜித் மற்றும் விஜய் படங்கள் ஒரே சமயத்தில் வெளியாகி ரசிகர்களுக்கு விருந்து படைத்தது. விஜய்யின் வாரிசு திரைப்படமும் அஜித்தின் துணிவு திரைப்படமும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியானது. கிட்டத்தட்ட 9 வருடங்களுக்கு பிறகு விஜய் மற்றும் அஜித் படங்கள் நேரடியாக மோதியதால் ரசிகர்கள் முதல் கோலிவுட் வட்டாரம் வரை அனைவரும் எதிர்பார்ப்பில் இருந்தனர். இந்நிலையில் இரு படங்களும் சரி சமமான வெற்றியை பெற்று வசூலை ஈட்டியது. ஆனால் இவர்கள் இருவரின் படங்கள் ஒரே சமயத்தில் வெளியானதால் இணையத்தில் ரசிகர்களிடம் மோதல் அதிகரித்த வண்ணம் இருந்தன. இந்நிலையில் தற்போது இந்த மோதலை தடுக்கும் வகையில் ஒரு தகவல் இணையத்தில் வெளியாகியுள்ளது

​விஜய்யை பாராட்டிய அஜித்பிரபல பாடகி சுசித்ரா சொன்ன ஒரு தகவல் தான் தற்போது அஜித் மற்றும் விஜய் ரசிகர்களின் மோதலை குறைத்துள்ளது. அதாவது சுசித்ராவை ஒரு பார்ட்டியில் பார்த்த அஜித் அவரிடம் , நீங்க பாடிய பாடலிலேயே விஜய்யின் வேட்டைக்காரன் படத்தில் இடம்பெற்ற சின்ன தாமரை பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும். அது எப்படி விஜய்க்கு மட்டும் நல்ல நல்ல பாட்ட அமையுதுன்னு தெரியலே என ஓப்பனாக அஜித் பேசினாராம். இப்படி ஒரு போட்டி நடிகரின் படத்தின் பாடல்களை அஜித் பாராட்டிய தகவல் தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது. என்னதான் இவர்களுக்குள் போட்டி இருந்தாலும் நல்ல நண்பர்களாகவே இருந்து வருகின்றனர் என சிலர் கருத்து சொல்ல, இந்த வீடீயோவை விஜய் ரசிகர்கள் அதிகம் ஷேர் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.