இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள்
சுதீப்தோ சென் இயக்கத்தில் அதா சர்மா உள்ளிட்டோர் நடித்த தி கேரளா ஸ்டோரி படம் கடந்த மே மாதம் 5ம் தேதி ரிலீஸானது. அந்த படம் பெரும் சர்ச்சைக்குள்ளானது. சர்ச்சைகள் கிளம்பியதாலேயே அந்த படத்தில் அப்படி என்னதான் இருக்கிறது என்பதை பார்க்க பலரும் தியேட்டர்களுக்கு சென்றார்கள். அதனால் அந்த படம் இதுவரை ரூ. 239. 4 கோடி வசூல் செய்திருக்கிறது.
சினிமாவில் 20 வருடங்களை நிறைவு செய்கிறேன்
தி கேரளா ஸ்டோரி படம் கொடுத்த தெம்பில் அடுத்த படத்தை இயக்க தயாராகிவிட்டார் சுதீப்தோ சென். பிரபல தொழில் அதிபரான சுப்ரதா ராயின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்கிறார் சுதீப்தோ சென். சஹாராஸ்ரீ என படத்திற்கு பெயர் வைத்து போஸ்டரையும் வெளியிட்டுள்ளார்.
அண்மைச் செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்
அந்த போஸ்டரில் இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மானின் பெயரை பார்த்த ரசிகர்களுக்கு வியப்பாக இருந்தது. இந்த கூட்டணியை சத்தியமாக எதிர்பார்க்கவில்லை ஆஸ்கர் நாயகனே என தெரிவித்துள்ளனர்.
சஹாராஸ்ரீ படத்திற்கு இசைப்புயல் இசையமைப்பதால் தமிழ் ரசிகர்களின் கவனம் எல்லாம் அந்த படம் பக்கம் திரும்பியிருக்கிறது.
முன்னதாக தி கேரளா ஸ்டோரிக்கு எதிராக பலரும் சமூக வலைதளங்களில் குரல் கொடுத்து வந்தபோது புது கேரளா ஸ்டோரி வீடியோவை ட்விட்டரில் வெளியிட்டார் ஏ.ஆர். ரஹ்மான். இந்து மதத்தை சேர்ந்த ஆணுக்கும், பெண்ணுக்கும் கேரளாவில் இருக்கும் மசூதி ஒன்றில் வைத்து திருமணம் நடந்தது.
ஏழைக் குடும்பத்தை சேர்ந்த அவர்களுக்கு இஸ்லாமியர்கள் உதவி செய்தது அனைவரையும் கவர்ந்தது. அந்த வீடியோவை ட்விட்டரில் வெளியிட்டு வாழ்த்தியிருந்தார் ரஹ்மான்.
இந்நிலையில் தி கேரளா ஸ்டோரி பட இயக்குநருடன் கூட்டணி சேர்ந்திருக்கிறார். சஹாராஸ்ரீ தொடர்பான சுதீப்தோ சென்னின் ட்வீட்டை பார்த்த சமூக வலைதளவாசிகள் கூறியிருப்பதாவது,
வேண்டாம் ரஹ்மான் சார். சுதீப்தோ சென் படத்தில் இருந்து விலகிவிடுங்கள். அவர் உங்கள் பெயரை கெடுத்துவிடுவார். அந்த படத்திற்கு இசையமைத்து உங்கள் தரத்தை குறைத்துக் கொள்ளாதீர்கள்.
வர வர ரஹ்மான்ஜியின் தேர்வு எல்லாம் வித்தியாசமாக இருக்கிறது. அவரை புரிந்துகொள்ள முடியவில்லை.
ஏ.ஆர். ரஹ்மான் ட்விட்டரில் படு ஆக்டிவாக இருக்கிறார். அதனால் நம் கமெண்ட்டுகளை நிச்சயம் பார்ப்பார். அந்த நம்பிக்கையில் தான்சஹாராஸ்ரீ படம் வேண்டாம் என சொல்கிறோம். விஷ பரீட்சை வேண்டாம் ரஹ்மான் ஜி என தெரிவித்துள்ளனர்.
ஒரு பக்கம் ஏ.ஆர். ரஹ்மானின் படத் தேர்வு பற்றி பேசுகிறார்கள். மறுபக்கம் ஏ.ஆர். ரஹ்மானின் மூத்த மகளான கதீஜாவுக்கு வாழ்த்து தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள் சமூக வலைதளவாசிகள்.
வித்தியாசமான படங்களை கொடுப்பதற்கு பெயர் போன ஹலிதா ஷமீம் மின்மினி என்கிற படத்தை இயக்கி வருகிறார். அந்த படத்திற்கு இசையமைக்கிறார் கதீஜா ரஹ்மான். மின்மினி படம் மூலம் இசையமைப்பாளர் அவதாரம் எடுத்திருக்கிறார் கதீஜா.
Khatija Rahman:அப்பா வழியில் இசையமைப்பாளரான ஏ.ஆர். ரஹ்மானின் மகள் கதீஜா
இத்தனை ஆண்டுகளாக பாடகியாக இருந்த கதீஜா தற்போது இசையமைப்பாளர் ஆகியிருக்கிறார். அவர் இசையில் பாடல்களை கேட்க ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
இசைப்புயலின் மகளாச்சே. அவரின் இசை பற்றி சொல்லவா வேண்டும். நிச்சயம் வேற லெவலில் தான் இருக்கும் என ரஹ்மான் ரசிகர்கள் ஏற்கனவே பேசத் துவங்கிவிட்டார்கள்.