Corona தடுப்பூசி செலுத்தியவர்கள் விவரங்கள் திருட்டு! தனியுரிமை பாதுகாப்பு எங்கே? அரசு பதிலளிக்குமா?

இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள்
உலகம் முழுவதும் கடந்த 2019 ஆம் ஆண்டு பரவிய கொரோனா தொற்று பல லட்சம் மக்களை பாதித்து பலர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் குறிப்பாக கொரோனா இரண்டாம் அலை மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் இந்திய அரசால் கொரோனா ஊசி செலுத்தியவர்கள் விவரங்களை பதிவு செய்ய தொடங்கப்பட்ட CoWin இணையத்தளத்தில் இருந்து மக்களின் தனிப்பட்ட விவரங்கள் திருடப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Twitter நிறுவனத்திற்கு எதிராக இறங்கிய மெட்டா! என்ன செய்வார் எலன் மஸ்க்!

இந்த இணையத்தளத்தில் இருந்து மக்களின் மொபைல் எண், ஆதார் எண், பாஸ்போர்ட் விவரம், வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப உறுப்பினர் அட்டை என பலரது விவரங்கள் கசிந்துள்ளது.

இந்தியாவில் முக்கிய பிரபலங்களாக இருக்கக்கூடிய பலரது விவரங்கள் telegram செயலியில் வெளியிடப்பட்டுள்ளது.முக்கியமாக முன்னாள் மத்திய அமைச்சர் பா. சிதம்பரம், ஜெய்ராம் ரமேஷ், சஞ்சய் ராவத் ஆகியவர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளன.

அரசின் இணையதளமான CoWIN இணையத்தளம் மூலமாக இப்படி விவரங்கள் திருடப்பட்டுள்ளது மக்களுக்கு பெரும் அதிருப்தியை அளித்துள்ளது. குறிப்பாக மக்களின் தனியுரிமை பாதுகாக்கப்படவேண்டும் என்ற கோரிக்கை மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

AI தொழில்நுட்பம் மூலம் போலி புகைப்படம், வீடியோ கொண்டு மிரட்டப்படும் மக்கள்!

ஏற்கனவே மக்கள் அதிகம் பயன்படுத்தும் சமூகவலைத்தளங்களான facebook, Twitter, Whatsapp போன்றவற்றில் மக்களின் தனிப்பட்ட இவரங்கள் திருடப்படுகின்றன. இப்போது அரசு இணையத்தளங்களே இப்படியான நிலைக்கு மாறிவிட்டதால் பல லட்சம் மக்கள் ஆன்லைன் மோசடிக்கு ஆளாக வாய்ப்பு உள்ளது.

செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸ்ல் ‘சமயம் தமிழ்’ இணையதளத்தை பின் தொடருங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.