Dhanush: தனுஷுக்கு என்னால 'நோ' சொல்லவே முடியாது: விஜய் பட ஹீரோயின்

இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள்
Kangana Ranaut about rejecting Dhanush movie: தனுஷின் டி50 படத்தில் நடிப்பது குறித்து பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் சமூக வலைதளத்தில் விளக்கம் அளித்துள்ளார்.

​டி50​ப. பாண்டி படம் மூலம் இயக்குநர் அவதாரம் எடுத்தார் தனுஷ். அதன் பிறகு அவர் படம் எதுவும் இயக்கவில்லை. அண்ணா மீண்டும் படம் இயக்குங்கள் என ரசிகர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தார்கள். இந்நிலையில் தான் டி50 படத்தை இயக்கி, நடிக்கவிருக்கிறார் தனுஷ். அந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடிக்குமாறு பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத்திடம் கேட்கப்பட்டதாக தகவல் வெளியானது.சித்தார்த்​சினிமாவில் 20 வருடங்களை நிறைவு செய்கிறேன்​​கங்கனா​டி50 படத்தில் நடிக்க கேட்டதற்கு கங்கனா ரனாவத் நோ சொல்லிவிட்டார் என்று கூறப்பட்டது. கங்கனாவுக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரம் வில்லத்தனம் கலந்ததாக இருந்ததாகவும், அதனால் அவர் தனுஷ் படத்தில் நடிக்க மறுத்துவிட்டதாகவும் பேசப்பட்டது. இந்நிலையில் இது குறித்து கங்கனாவே விளக்கம் அளித்துள்ளார். டி50 படத்தில் தான் நடிக்க மறுத்ததாக வெளியான செய்தியை போஸ்ட் செய்து, இது பொய்யான செய்தி என்றார் கங்கனா.

​Kangana Ranaut: அந்த ஒல்லி வெள்ளை எலி ராமராக நடிப்பதா?: நடிகை கங்கனா ரனாவத்

​தனுஷ்​டி50 பற்றி கங்கனா ரனாவத் கூறியிருப்பதாவது, இது பொய்யான செய்தி. அது போன்று எந்த பட வாய்ப்பும் என்னை தேடி வரவில்லை. தனுஷ் இஸ் மை fab. அவருக்கு என்னால் நோ சொல்லவே முடியாது என தெரிவித்துள்ளார் கங்கனா. அவரின் விளக்கத்தை பார்த்த தனுஷ் ரசிகர்களோ, ஒரு நடிப்பு ராட்சசிக்கு நடிப்பு ராட்சசனை இந்த அளவுக்கு பிடித்திருக்கிறதே என்கிறார்கள்.
​சந்திரமுகி 2​ஏ.எல். விஜய் இயக்கிய தலைவி படத்தில் மறைந்த முன்னாள் முதல்வரான ஜெயலலிதாவாக நடித்திருந்தார் கங்கனா. மேலும் சந்திரமுகி 2 படத்தில் ராகவா லாரன்ஸுடன் சேர்ந்து நடித்து முடித்திருக்கிறார். தமிழ் ரசிகர்களுக்கு பழக்கமானவர் தான் கங்கனா ரனாவத். இந்நிலையில் தான் அவர் தனுஷுடன் சேர்ந்து நடிக்க மறுத்ததாக வதந்தி பரவியிருக்கிறது.

​Leo: விஜய்யின் லியோவில் பிரேமம் பட நடிகை: லைட்டா பயத்தில் தளபதி ரசிகர்கள்

​த்ரிஷா​தனுஷின் டி50 படத்தில் விஷ்ணு விஷாலும், எஸ்.ஜே. சூர்யாவும் அவரின் சகோதரர்களாக நடிக்கிறார்கள். அந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்நிலையில் டி50 படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடிக்குமாறு த்ரிஷாவிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது. விஜய்யின் லியோ, அஜித் குமாரின் விடாமுயற்சியை அடுத்து தனுஷ் பட வாய்ப்பு த்ரிஷாவை தேடிச் சென்றிருக்கிறது.
​கங்கனா, மாதவன்​கங்கனா ரனாவத் பற்றி தமிழ் திரையுலகில் அண்மையில் வதந்தி பரவியது இது ஒன்றும் முதல் முறை அல்ல. அயோத்தி படம் புகழ் மந்திரமூர்த்தி இயக்கும் படத்தில் மாதவனும், கங்கனா ரனாவத்தும் சேர்ந்து நடிப்பதாக தகவல் வெளியானது. தனு வெட்ஸ் மனு படம் மூலம் பிரபலமான இந்த ஜோடி தற்போது தமிழ் படத்திற்காக மீண்டும் சேர்கிறது என்றார்கள். ஆனால் தன் படத்தில் கங்கனா நடிக்கவில்லை என மந்திரமூர்த்தி விளக்கம் அளித்து அந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தார். கங்கனா தன் எமர்ஜென்சி பட வேலையில் பிசியாக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.