புதுடில்லி: மத்திய பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட சட்டசபை தேர்தல்கள் நடக்கவுள்ள ஐந்து
மாநிலங்களில், அதிகாரிகளை பணியிடம் மாற்றம் செய்யும்படி, சம்பந்தபட்ட மாநில தலைமைச் செயலர்களுக்கு தேர்தல்ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், தெலுங்கானா, மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களில் அடுத்த சில மாதங்களில் சட்டசபை தேர்தல்கள் நடக்கவுள்ளன.
இதையடுத்து, இந்த மாநிலங்களின் தலைமைச்செயலர்களுக்கு, தலைமை தேர்தல் ஆணையம் எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டு உள்ளதாவது:எந்த ஒரு மாவட்டத்திலும் மூன்று ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றும்அதிகாரிகள், சொந்த மாவட்டங்களில் பணியாற்றும் அதிகாரிகள் ஆகியோரை உடனடியாக பணியிட மாற்றம் செய்ய வேண்டும். போலீஸ் அதிகாரிகளுக்கும் இந்த உத்தரவு பொருந்தும். தேர்தல் நடவடிக்கைகளில் தொடர்புடைய அதிகாரிகள் மட்டுமே பணியிட மாற்றம் செய்யப்பட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement