இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள்
உலகளவில் பிரீமியம் ஸ்மார்ட்போன்கள் வரிசையில் ஆப்பிள் ஐபோன், சாம்சங் நிறுவனங்களுக்கு அடுத்தபடியாக இருக்கும் Google நிறுவனத்தின் Pixel போன்கள் வரிசையில் புதிய 8 சீரிஸ் இன்னும் சில மாதங்களில் வெளியாகவுள்ளது.
சமீபத்தில் விலை குறைந்த Google Pixel 7a ஸ்மார்ட்போன் Google I/O 2023 நிகழ்ச்சியில் வெளியிடப்பட்டது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட Pixel 8 சீரிஸ் பற்றிய விவரங்கள் எதுவும் வெளியாகாததால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
Twitter நிறுவனத்திற்கு எதிராக இறங்கிய மெட்டா! என்ன செய்வார் எலன் மஸ்க்!
Google Pixel 8 சீரிஸ்
புதிய பிக்சல் 8 சீரிஸ் போன்களில் 50MP Samsung ISOCELL GN2 கேமரா வசதி இடம்பெற்றுள்ளது. இதே சென்சார் வசதி சாம்சங் Galaxy S22 மற்றும் S23 சீரிஸ் போன்களிலும் இடம்பெற்றுள்ளது. இதற்கு முன்பாக இருந்த GN1 சென்சார் திறனை விட GN2 சென்சார் சற்று அதிக திறன் கொண்டுள்ளது.
இந்த புதிய GN2 சென்சார் 35% அதிகப்படியான Light Capture செய்யக்கூடியது. மேலும் Low Light Capture திறனும் இதற்கு அதிகமாகவே உள்ளது. இதில் 8K/30fps வீடியோ கேப்ச்சர், HDR, Google Cloud Leverage வசதி இடம்பெற்றுள்ளது. மேலும் 12MP அல்ட்ரா வைட் கேமரா மற்றும் Google Pixel 7a ஸ்மார்ட்போனில் இடம்பெறும் 64MP கேமரா வசதியும் இடம்பெறும். இதன் முன்பக்கம் அதே 10.8MP செல்பி கேமரா.
Apple VR கருவியை கலாய்த்து தள்ளிய எலன் மஸ்க்! 20 டாலர் காளான்களுக்கு நிகரா?
இதைத்தவிர புதிதாக கேமரா வசதிகள் இந்த இரு ஸ்மார்ட்போன்களில் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் ‘Bokeh Mode’ மூலமாக இனி ‘Cinematic Video Mode’, Adaptive Torch’, ‘Flash Module’ போன்ற வசதிகள் கூடுதலாக இருக்கும்.
செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸ்ல் ‘சமயம் தமிழ்’ இணையதளத்தை பின் தொடருங்கள்