சென்னை : நடிகை ஹன்சிகா மோத்வானி தனது செல்ல நாய் குட்டியை கொஞ்சி ரசிகர்களை காண்டு ஏந்தி உள்ளார்.
ஹன்சிகா மோத்வானி முன்னணி நடிகையாக வலம் வருகிறார். தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து வருகிறார்.
2007ம் ஆண்டு தெலுங்கில் வெளியான தேசமுருடு என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுக ஹான்சிகா, தமிழில் தனுஷுக்கு ஜோடியாக மாப்பிள்ளை படத்தில் அறிமுகமானார்.
ஹன்சிகா மோத்வானி : இதன் பின் உதயநிதி ஸ்டாலின் அறிமுகமான ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தில் நடித்திருந்தார். இந்த படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. இதையடுத்து, சிம்பு, சித்தார்த், ஜெயம்ரவி உள்ளிட்டவர்களின் படங்களில் நடித்து தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை சேர்த்து வைத்து இருக்கிறார்.
காதல் திருமணம் : கடந்த டிசம்பர் மாதம் முன் தனது நீண்ட நாள் நண்பர், தொழில் அதிபரானசோஹேல் கதுரியாவை திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் ராஜஸ்தானில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. திருமணத்திற்கு பின் தமிழ், ஹிந்தி உள்ளிட்ட மொழி படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.
மதிக்கவில்லை : அண்மையில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்திருந்த ஹன்சிகா மோத்வானி, ஆரம்ப காலத்தில் தென்னிந்திய படங்களில் நடித்து வந்ததால் டிசைனர்கள் ஆடைகளை வழங்க முன்வரவில்லை. அனால் தற்போது என்னுடைய பட வெளியீட்டு விழாவிற்கு நீங்கள் ஏன் எங்களுடைய ஆடைகளை அணியக்கூடாது என்று கேட்கிறார்கள். மேலும் நான் ஒரு நடிகை. இதை நான் எப்போதும் கூறுவேன் என்று அந்த பேட்டியில் கூறியிருந்தார்.
காண்டு ஏத்துறீங்களா : முன்வை விட திருமணத்திற்கு பிறகு பல படங்களை கைவசம் வைத்துக்கொண்டு நடித்து வருகிறார். படங்களில் நடித்தாலும் இன்ஸ்டா வாசிகளுக்கு என்று அவ்வப்போது கவர்ச்சி தரிசனம் கொடுத்து வரும் ஹன்சிகா மோத்வானி, தனது செல்ல நாயுடன் விதவிதமான புகைப்படம் எடுத்து அதை அப்லோடு செய்துள்ளார். அந்த போட்டோவைப் பார்த்த பேன்ஸ் எங்களை காண்டு ஏத்துறீங்களா என்றும், கொடுத்து வச்ச நாய் என்றும் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.