சூர்யா நடிப்பில் தற்போது மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகி வரும் படம் ‘கங்குவா’. இந்தப்படம் குறித்த டைட்டில் அறிவிப்போடு படங்குழு எந்தவித அப்டேட்டையும் வெளியிடாமல் தற்போது மும்முரமாக படப்பிடிப்பை நடத்தி வருகிறது. ஆனாலும் அவ்வப்போது இந்தப்படம் குறித்து வெளியாகும் ஒவ்வொரு தகவலும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பலமடங்கு எகிற செய்து வருகிறது.
இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள்
‘கங்குவா’ சரித்திர பின்னணி கொண்ட கதையம்சத்துடன் உருவாகி வருகிறது. இந்தப்படத்திற்காக உடல் எடையை ஏற்றி வெறித்தனமாக நடித்து வருகிறார் சூர்யா. இந்தப்படத்தில் இவர் பல கெட்டப்பில் நடித்து வருவதாக கூறப்பட்டாலும், இதுவரை எந்தவொரு கெட்டப்பையும் வெளியிடாமல் இருக்கிறது படக்குழு.
அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்
இந்நிலையில் தற்போதைய லேட்டஸ்ட் தகவலின்படி சூர்யா பிறந்தநாளில் ‘கங்குவா’ படத்தின் செம்மையான அப்டேட் வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி இந்தப்படத்திற்கான ப்ரோமோ அல்லது கிளிம்ப்ஸ் வீடியோ சூர்யா பிறந்தநாளன்று வெளியாக வாய்ப்புள்ளதாக செய்திகள் கசிந்துள்ளன. இதனால் சூர்யா ரசிகர்கள் உச்சக்கட்ட எதிர்பார்ப்பில் உள்ளனர்.
தமிழ் சினிமாவில் வீரம், வேதாளம், அண்ணாத்த போன்ற பேமிலி செண்டிமென்ட் டிராமா படங்களை இயக்கி வந்தவர் சிறுத்தை சிவா. இவர் முதன் முதலாக சூர்யாவை வைத்து ‘கங்குவா’ படத்தை இயக்கி வருகிறது. மிகுந்த பொருட்செலவில் உருவாகி வரும் இந்தப்படத்தை ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரித்து வருகிறார். இந்தப்படத்தில் சூர்யா பல கெட்டப்களில் நடிப்பதாக கூறப்படுகிறது.
Prabhu Deva: மீண்டும் அப்பாவான நடிகர் பிரபு தேவா.. மகிழ்ச்சியில் மொத்த குடும்பம்..!
மேலும் ‘கங்குவா’ படம் ரிலீசுக்கு முன்பான பிசினஸில் பட்டையை கிளப்பி வருவதாக கூறப்படுகிறது. சுமார் பத்துக்கு மேற்பட்ட மொழிகளில் உருவாகி வரும் இந்தப்படத்தின் சேட்டிலைட், டிஜிட்டல் மற்றும் ஆடியோ உரிமை பல கோடி ரூபாய்க்கு விற்பனையாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகின. இதனால் இந்தப்படத்திற்கு கோலிவுட் சினிமாவில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
அண்மையில் பேட்டி ஒன்றில் பாடலாசிரியர் மதன் கார்க்கி ‘கங்குவா’ படம் குறித்து பேசும் போது, இந்தப்படம் சிறுத்தை சிவாவின் ரெகுலர் படமாக இருக்காது. அவர் தன்னையே புதுப்பித்து கொண்ட படமாக இருக்கும். ‘கங்குவா’ படத்தின் சில காட்சிகளை பார்த்தேன். அருமையாக வந்துள்ளது என தெரிவித்திருந்தார். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் ‘கங்குவா’ படத்தில் பாலிவுட் நடிகை திஷா பதானி ஹீரோயினாக நடிப்பது குறிப்பிடத்தக்கது.
Por Thozhil: ப்ளூ சட்டை மாறனின் ‘போர் தொழில்’ பட விமர்சனம்: சரத்குமாரின் ரியாக்சன் இதுதான்.!