இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள்
Bhola Shankar shootingspot: மெகாஸ்டார் சிரஞ்சீவி தன்னுடன் சேர்ந்து போலா ஷங்கர் படத்தில் நடித்திருக்கும் கீர்த்தி சுரேஷின் கழுத்தை நெரித்த வீடியோ ரசிகர்களை கவர்ந்துவிட்டது.
போலா ஷங்கர்சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் குமார், ஸ்ருதி ஹாசன், லக்ஷ்மி மேனன் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான வேதாளம் படத்தை தெலுங்கில் போலா ஷங்கர் என்கிற பெயரில் ரீமேக் செய்துள்ளனர். மெஹர் ரமேஷ் இயக்கியிருக்கும் போலா ஷங்கரில் அஜித் குமாரின் கதாபாத்திரத்தில் மெகாஸ்டார் சிரஞ்சீவியும், ஸ்ருதி கதாபாத்திரத்தில் தமன்னாவும், லக்ஷ்மி மேனன் கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷும் நடித்துள்ளனர்.சித்தார்த்சினிமாவில் 20 வருடங்களை நிறைவு செய்கிறேன்வைரல் வீடியோசிரஞ்சீவியின் பாசக்கார தங்கையாக கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கும் போலா ஷங்கர் படம் வரம் ஆகஸ்ட் மாதம் 11ம் தேதி தியேட்டர்களில் ரிலீஸாகவிருக்கிறது. இந்நிலையில் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட வீடியோ வெளியாகி வைரலாகியுள்ளது. அந்த வீடியோவில் சிரஞ்சீவி, கீர்த்தி சுரேஷ் மற்றும் தமன்னா ஜாலியாக சிரித்துப் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்பொழுது கீர்த்தி சுரேஷ் ஏதோ சொல்ல சிரஞ்சீவி விளையாட்டாக அவரின் கழுத்தை நெரித்தார்.
காமெடிசிரிப்புசிரஞ்சீவி செய்த காரியத்தை பார்த்த தமன்னா சிரித்தார். பின்னர் மூன்று பேருமே சிரித்தார்கள். அந்த வீடியோவை தான் கீர்த்தி சுரேஷ் மற்றும் சிரஞ்சீவியின் ரசிகர்கள் அதிக அளவில் ஷேர் செய்து வருகிறார்கள். பாஸ் மற்றும் கீர்த்திக்கு இடையேயான அண்ணன், தங்கை உறவை பார்க்கவே சந்தோஷமாக இருப்பதாக சிரஞ்சீவி ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.
அண்ணாத்தDhanush: தனுஷுக்கு என்னால ‘நோ’ சொல்லவே முடியாது: விஜய் பட ஹீரோயின்முன்னதாக சிறுத்தை சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த அண்ணாத்த படத்தில் அவருக்கு தங்கையாக நடித்தார் கீர்த்தி சுரேஷ். ஒரு முன்னணி நடிகையாக இருந்து கொண்டு இப்படி தங்கையாக நடித்தால் இமேஜ் போய்விடும், தொடர்ந்து தங்கச்சி பாப்பாவாக நடிக்கவே இயக்குநர்கள் அழைப்பார்களே என்று ரசிகர்கள் எச்சரித்தார்கள். ஆனால் அதை கீர்த்தி கண்டுகொள்ளவில்லை.
இமேஜ்அண்ணாத்த படத்தை அடுத்து போலா ஷங்கர் படத்திலும் தங்கை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் கீர்த்தி. கோலிவுட்டை போன்றே தெலுங்கு திரையுலகிலும் முன்னணி ஹீரோயின்களில் ஒருவர் கீர்த்தி. அப்படி இருந்தும் இமேஜை பற்றி எல்லாம் கொஞ்சம் கூட கவலைப்படாமல் தைரியமாக தங்கையாக நடித்திருக்கிறார். கதாபாத்திரம் நன்றாக இருந்தால் போதும் என நினைக்கிறார் கீர்த்தி.
தக் கீர்த்திகீர்த்தி சுரேஷ் அண்மையில் தன் அம்மா, அப்பா, அக்கா ரேவதியுடன் திருப்பதி கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். கோவில் வளாகத்தில் கீர்த்தியை பார்த்த செய்தியாளர்கள் கூடிவிட்டார்கள். அப்பொழுது அவர் தெலுங்கில் பேச, செய்தியாளர் ஒருவரோ தமிழில் பேசுங்க மேடம் என்றார். அதை கேட்ட கீர்த்தியோ, திருப்பதில இருக்கேன் என பதில் அளித்தார். அப்பொழுது எடுக்கப்பட்ட வீடியோவை ஷேர் செய்து தக் கீர்த்தி என தெரிவித்தார்கள் ரசிகர்கள்.
Keerthy Suresh: திருப்பதி ஏழுமலையானை தரிசித்த கீர்த்தி: அந்த ‘தக்’ பதில் தான் அல்டிமேட்திருமணம்Keerthy Suresh: என் மகளை விட்டுடுங்க ப்ளீஸ்: கீர்த்தி சுரேஷ் அப்பாகை நிறைய படங்கள் வைத்துக் கொண்டு படுபிசியாக நடித்து வருகிறார் கீர்த்தி சுரேஷ். இந்நிலையில் அவருக்கும், துபாயை சேர்ந்த தொழில் அதிபர் ஃபர்ஹானுக்கும் விரைவில் திருமணம் என செய்திகள் வெளியாகின. அதை பார்த்த கீர்த்தியோ, ஃபர்ஹான் என் நல்ல நண்பர் மட்டுமே என தெரிவித்தார். மேலும் கீர்த்தியின் தந்தை சுரேஷும் அந்த திருமண தகவல் வதந்தியே என்றார்.