சென்னை: லியோ படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெறுகிறது.
இதில், 2000 நடன கலைஞர்களுடன் விஜய் ஆடும் பாடல் ஒன்று படமாக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.
இதுதவிர சில ஆக்ஷன் காட்சிகளையும் சீக்ரெட்டாக எடுத்து முடித்துள்ளார் லோகேஷ் கனகராஜ்.
இந்நிலையில், ஷூட்டிங் ஸ்பாட்டில் லியோ டீமை விஜய் ரவுண்ட் கட்டிய போட்டோ வெளியாகி வைரலாகியுள்ளது.
லியோ டீமை ரவுண்டு கட்டிய விஜய்:வாரிசு ரிலீஸானதுமே லியோ படத்தின் அபிஸியல் அப்டேட் வெளியானது. அதேவேகத்தில் காஷ்மீர் சென்ற படக்குழு முதற்கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பியது. இதனையடுத்து இரண்டாம்கட்ட படப்பிடிப்பை சென்னையில் தொடங்கிய லோகேஷ், விஜய்யின் சில முக்கியமான காட்சிகளை எடுத்து வருவதாக சொல்லப்படுகிறது.
விஜய் – சஞ்சய் தத் ஆக்ஷன் சீன், விஜய் – த்ரிஷா ரொமன்ஸ், இதுபோக விஜய்யுடன் மற்ற நடிகர்கள் நடிக்கும் காட்சிகளை ஷூட் செய்துவருகிறார் லோகேஷ். முக்கியமாக 2000 நடன கலைஞர்களுடன் விஜய் டான்ஸ் ஆடும் பாடல் ஒன்றையும் படமாக்கி வருகிறாராம். ஒருபக்கம் ஷூட்டிங் ஸ்பாட் அப்டேட்ஸ், இன்னொருபக்கம் லியோ ப்ரீ ரிலீஸ் பிசினஸ் என மொத்த படக்குழுவும் பிஸியாக உள்ளது.
ஆயுத பூஜை வெளியிடாக லியோ ரிலீஸாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டதால், ஆகஸ்ட் மாதத்திற்குள் மொத்த படப்பிடிப்பையும் முடிக்க லோகேஷ் திட்டமிட்டுள்ளாராம். அதற்கேற்றபடி தான் லியோ ஷூட்டிங் நடந்து வருவதாக சொல்லப்படுகிறது. இதனிடையே படத்திற்கு தேவையான ப்ரோமோஷன்களையும் தயாரிப்புத் தரப்பு சைலண்டாக செய்து வருகிறதாம். இந்நிலையில், லியோ டீமை விஜய் ரவுண்டு கட்டியுள்ளார்.
சென்னையில் நடைபெற்று வரும் படப்பிடிப்பு முழுவதும் செட் போட்டு தான் படமாக்கப்படுகிறது. இதில், பேக்கரி செட் போட்டு அதில் விஜய் நடிக்கும் காட்சிகளை எடுத்து வருகிறார் லோகேஷ். அப்போது டைரக்ஷன் டீமும் விஜய் சீரியஸ்ஸாக டிஸ்கஸ் செய்துவரும் போட்டோ ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. மாஸ்டர் வாத்தி மாதிரி சின்ன மேஜையில் அமர்ந்திருக்கும் விஜய், தன்னை சுற்றி நிற்கும் படக்குழுவினருடன் பேசிக் கொண்டிருக்கிறார்.
இந்த போட்டோ படக்குழு சார்பில் அபிஸியலாக வெளியிடப்பட்டதாக தெரியவில்லை. ஆனால், டிவிட்டர் உட்பட சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த போட்டோவில் விஜய் அப்படி என்னதான் பேசியிருப்பாரோ என ரசிகர்கள் புலம்பி வருகின்றனர். இந்நிலையில், ஜூன் 22ம் தேதி விஜய்யின் பிறந்தநாள் என்பதால் லியோ அப்டேட் வெளியாகும் எனவும் ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.