இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய், த்ரிஷா, சஞ்சய் தத், கவுதம் மேனன், மிஷ்கின், ப்ரியா ஆனந்த் உள்ளிட்டோர் நடித்து வரும் படம் லியோ. சென்னையில் படப்பிடிப்பு நடந்து வருகிறது.
சினிமாவில் 20 வருடங்களை நிறைவு செய்கிறேன்
விஜய் மற்றும் 2 ஆயிரம் டான்ஸர்களை வைத்து அறிமுக பாடலை படமாக்கி முடித்திருக்கிறார் லோகேஷ் கனகராஜ். பிரமாண்டமாக உருவாகியிக்கும் அந்த பாடலுக்கு தினேஷ் மாஸ்டர் தான் ஸ்டெப்ஸ் சொல்லிக் கொடுத்திருக்கிறார்.
அண்மைச் செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்
இந்நிலையில் பிரேமம் படம் புகழ் நடிகை மடோனா செபாஸ்டியன் லியோ படத்தில் நடிக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது. லியோ படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டிவிட்டது. ஆனாலும் அவ்வப்போது நடிகர்கள், நடிகைகளை சேர்த்துக் கொண்டே இருக்கிறார் லோகேஷ் கனகராஜ்.
படத்தில் வில்லன் பட்டாளம் இருக்கிறது. அது போதாது என்று ஏகப்பட்ட நடிகர்கள், நடிகைகள் இருக்கிறார்கள். அனைவரையும் காட்டினால் தளபதியின் ப்ரசன்ஸ் பாதிக்கப்படுமே என்பதே விஜய் ரசிகர்களின் கவலையாக இருக்கிறது. தற்போது தலைப்பை மீண்டும் வாசிக்கவும்.
கிளைமாக்ஸ் காட்சியை படமாக்க அடுத்ததாக ஹைதராபாத் செல்கிறது படக்குழு. அங்கு சென்ற பிறகும் நடிகர்கள், நடிகைகளை புதிதாக சேர்ப்பாரா லோகேஷ் கனகராஜ் என ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
லியோ படத்தில் ஒரு பெரிய பட்டாளமே நடிக்கிறதே. அப்படி என்ன தான் கதை என தெரியவில்லை என்று ரசிகர்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
லியோ படத்தின் கதை எல்.சி.யூ.வா என லோகேஷ் கனகராஜிடம் கேட்டதற்கு, அதை பற்றி தற்போதைக்கு கேட்க வேண்டாம் என்று சொல்லிவிட்டார். படம் குறித்து எதையும் தெரிவிக்காமல் படப்பிடிப்பை நடத்தி வருகிறார் லோகேஷ்.
லியோவில் விஜய் ஒரு கேங்ஸ்டர். அவருக்கு முக்கிய வில்லனாக பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் இருப்பார் என்று முதலில் கூறப்பட்டது. இந்நிலையில் சஞ்சய் தத் விஜய்யின் அப்பாவாக நடிக்கிறார். அவரும் ஒரு கேங்ஸ்டர் தான். ஆனால் விஜய்க்கு எதிராக இல்லை, விஜய்யுடன் சேர்ந்து தான் இருப்பார் என்று கூறப்படுகிறது.
அறிமுக பாடலுக்கு முன்பு விஜய், ஆக்ஷன் கிங் அர்ஜுன் தொடர்பான காட்சிகளை ஷூட் செய்தார்கள். கொடூரமான வில்லனாக வருவார் அர்ஜுன் என்றார்கள். இந்நிலையில் அவர் விஜய்யின் அண்ணனாக நடிக்கிறார் என்று பேச்சு கிளம்பியிருக்கிறது.
விஜய்யின் மனைவியாக த்ரிஷாவும், மகளாக நடிகர் அர்ஜுனனின் மகள் இயலும் நடிப்பதாக பேசப்படுகிறது. லியோ பற்றி லோகேஷ் எதுவும் சொல்லாமல் இருப்பதாலேயே படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.
அந்த எதிர்பார்ப்பால் தான் லியோ படம் ரிலீஸுக்கு முன்பே ரூ. 350 கோடி வசூல் செய்திருக்கிறது. படத்தின் இசை, சாட்டிலைட், டிஜிட்டல் உள்ளிட்ட உரிமங்களை விற்பனை செய்ததன் மூலம் அந்த தொகை கிடைத்திருக்கிறது.
லியோவின் கேரளா தியேட்டர் உரிமம் ரூ. 16 கோடிக்கு சென்றிருக்கிறது. இதன் மூலம் கேரளாவில் அதிக விலைக்கு விற்பனையான படம் என்கிற ரஜினிகாந்தின் 2.0 சாதனையை லியோ முறியடித்துள்ளது.
Rajinikanth Jailer: கேரளாவில் ரஜினியின் ஜெயிலரை முந்திய விஜய்யின் லியோ
லியோவின் சாதனையை ரஜினியின் ஜெயிலர் படம் முறியடிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் நடித்திருக்கும் ஜெயிலர் படத்தின் கேரளா தியேட்டர் உரிமம் ரூ. 9 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து அறிந்த விஜய் ரசிகர்களோ, கேரளா தளபதியின் கோட்டை. அங்கு அவர் தான் கிங். அவரை அசைக்க யாராலும் முடியாது என பெருமையாக கூறி வருகிறார்கள்.