இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள்
விஜய்யின் லியோ திரைப்படத்தில் இடம்பெறும் அந்த பிரம்மாண்டமான பாடல் தான் தற்போது கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது. பொதுவாக லோகேஷ் கனகராஜ் தன் படங்களின் பாடல் காட்சிகளுக்கு அந்தளவிற்கு முக்கியத்துவம் கொடுக்கமாட்டார்.
மாஸ்டர் படத்தில் மட்டும் விஜய்க்காக பாடல் காட்சிகளை வைத்திருந்தார் லோகேஷ். ஆனால் லியோ திரைப்படத்தில் லோகேஷ் பாடல் காட்சிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருவதாக தகவல்கள் வருகின்றன. விஜய், த்ரிஷா, அர்ஜுன், சஞ்சய் தத், மன்சூர் அலி கான் என பல நட்சத்திரங்கள் நடித்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.
தற்போது இப்படத்தின் பாடல் காட்சி ஒன்று சென்னையில் செட் அமைத்து படமாக்கப்பட்டது. அனிருத்தின் இசையில் விஜய் இப்பாடலை பாடியுள்ளதாக தகவல்கள் வருகின்றன. தர லோக்கலான இப்பாடலில் கிட்டத்தட்ட 2000 நடனக்கலைஞர்கள் ஆடியுள்ளதாக தெரிகின்றது.
லோகேஷ்- அனிருத் காம்போ
இதுவரை தமிழ் சினிமாவில் வெளியான பிரம்மாண்டமான பாடல்களில் இதுவும் ஒன்றாக இருக்கும் என கோலிவுட் வட்டாரத்தில் பேசி வருகின்றனர். அந்த அளவிற்கு இப்பாடலுக்கு லோகேஷ் முக்கியத்துவம் கொடுத்து எடுத்துள்ளார். இந்நிலையில் முதலில் இப்பாடலை அனிருத் தான் பாடினார் என்றும், ஆனால் லோகேஷ், விஜய் இப்பாடலை பாடினால் நன்றாக இருக்கும் என நினைத்ததால் விஜய்யே இப்பாடலை தற்போது பாடியுள்ளதாகவும் தெரிகின்றது.
Ajith: படம் கண்டிப்பா பிளாப் ஆகும்னு தெரிஞ்சே தான் அஜித் நடிச்சாரு..உண்மையை உடைத்த முன்னணி இயக்குனர்..!
ஆனால் இதில் எந்த அளவிற்கு உண்மை உள்ளது என தெரியவில்லை. இது ஒருபக்கம் இருக்க தற்போது இப்பாடல் காட்சி முழுவதும் படமாக்கப்பட்டுள்ளது. மிகப்பிரமாண்டமாக உருவாகியுள்ள இப்பாடல் காட்சியில் சில பிரபலங்கள் கெஸ்ட் அப்பியரன்ஸில் வந்து நடனமாடியுள்ளார்களாம்.
மடோனாவின் கெஸ்ட் அப்பியரன்ஸ்
தமிழ் மற்றும் மலையாளத்தில் பிரபலமான நடிகையாக வலம் வரும் மடோனா செபாஸ்டியன் இப்பாடலில் சிறப்பு தோற்றத்தில் வந்து நடனமாடி இருக்கின்றார் என தகவல் வந்துள்ளது. இதைத்தவிர இயக்குனர் லோகேஷ் மற்றும் அனிருத் இருவரும் இப்பாடலில் தோன்றியுள்ளனர் எனவும் பேசப்பட்டு வருகின்றது.
அண்மைசெய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் சமயம் தமிழ் இணையத்தளத்தி பின் தொடரவும்
மேலும் படத்தை சார்ந்த சிலரும் இப்பாடலில் வந்து நடனமாடி இருக்கின்றார்கள் என தகவல்கள் வருகின்றன. இந்த தகவல் எல்லாம் ரசிகர்களை உச்சகட்ட எதிர்பார்ப்பில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில் ஜூன் 22 ஆம் தேதி விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு லியோ படத்தின் கிலிம்ஸ் வீடியோ வெளியாகும் என ரசிகர்கள் அனைவரும் ஆவலாக எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.