சிவகார்த்திகேயன் ‘மாவீரன்’ படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்து ரிலீசுக்கு தயாராகவுள்ளது. இதன் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தற்போது தீவிரமாக நடந்து வருகிறது. இந்தப்படம் குறித்து தினமும் ஒவ்வொரு அப்டேட் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் எக்கச்சக்கமான எதிர்பார்ப்பினை கிளப்பி வருகிறது. இந்நிலையில் ‘மாவீரன்’ படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை படக்குழு தற்போது வெளியாகியுள்ளது.
இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள்
சிவகார்த்திகேயன், அதிதி ஷங்கர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘மாவீரன்’. ரிலீசுக்கு தயாராகவுள்ள இந்தப்படத்தின் கலகலப்பான செகண்ட் சிங்கிள் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. நெல்சனின் டாக்டர், பீஸ்ட் படங்களின் புரமோஷனுக்காக வெளியிட்ட கலகலப்பான வீடியோவை போன்றே தற்போது ‘மாவீரன்’ படத்துக்கான செகண்ட் சிங்கிள் குறித்த அறிவிப்பு வீடியோ வெளியாகியுள்ளது.
அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்
அந்த வீடியோவில் பாடல் ஒன்றின் டிஸ்கசனில் இருக்கு மடோன் அஸ்வின், இசையமைப்பாளர் பரத் ஷங்கரும் உடனே யாரை பாட வைப்பது என யோசிக்கின்றனர். சரியென அதிதி ஷங்கரிடம் முதலில் போன் பண்ணி பாட அழைக்கும் போது, அவர் கூட யார் பாட போவது என கேட்கிறார். சித் ஸ்ரீராம் என சொன்னதும் ‘இதோ வண்டில ஏறிட்டேன்’ என சொல்லி போனை வைக்கிறார்.
அதனை தொடர்ந்து சிவகார்த்திகேயனிடம் பேசும் போது, ‘அவரும் யாரோட பாடனும் என கேட்கிறார். அவரிடம் ஸ்ரேயா கோஷல்’ என சொல்கிறார் மடோன் அஸ்வின். உடனே நான் பாடுறேன் தெரிஞ்சும் அவுங்க ஓகே சொல்லிட்டாங்களா என குஷியாகி ஸ்டுடியோவிற்கு கிளம்பி வருகிறார் சிவகார்த்திகேயன். உள்ளே வரும் போதே, ஸ்ரேயா கோஷல் பாடிய ‘முன்பே வா’ பாடல் எல்லாம் பாடி குதுகலமாக ஸ்டுடியோக்குள் நுழைகிறார்.
இதெல்லாம் எடுப்பாங்களா.?: பிரபல நடிகை வெளியிட்ட பகீர் வீடியோ..!
அதன்பிறகு உள்ளே போய் பாட தயாராகும் போது சிவகார்த்திகேயனும், அதிதி ஷங்கரும் ஒருவரை ஒருவர் பார்த்து ஷாக்காகின்றனர். இருவரும் வாக்குவாதம் செய்கின்றனர். ‘இவுங்களை விட்டா சண்டை போட்டுட்டே இருப்பாங்க. நம்ம ரெக்கார்டிங் போகலாம்’ என மடோன் அஸ்வின் சொல்வதுடன் ‘மாவீரன்’ செகண்ட் சிங்கிள் குறித்த அறிவிப்பு வெளியாகிறது. இந்த கலகலப்பான வீடியோ சோஷியல் மீடியாவில் செம்மையாக வைரலாகி வருகிறது.
சிவகார்த்திகேயனும், அதிதி ஷங்கரும் இணைந்து பாடியுள்ள இந்த ‘வண்ணாரப்பேட்டையிலே’ பாடல் வரும் 14 ஆம் தேதி வெளியாகவுள்ளது. ஹீரோ, ஹீரோயின் இணைந்து பாடியுள்ள பாடல் என்பதால் கண்டிப்பாக இந்தப்பாடல் ஹிட்டடிக்கும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். சிவகார்த்திகேயன், அதிதி ஷங்கர், மிஷ்கின், சுனில், சரிதா, யோகி பாபு உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள ‘மாவீரன்’ படம் ஜுலை 14 ஆம் தேதி ரிலீசாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
Meena: இரண்டு நாளில் திருமணத்தை வைத்துக்கொண்டு மீனா செய்த காரியம்: பிரபலம் பகிர்ந்த தகவல்.!