சென்னை : சிம்புவுடன் இணைந்து தமிழில் தன்னுடைய முதல் படத்திலேயே என்ட்ரி கொடுத்தவர் நடிகை மஞ்சிமா மோகன். கௌதம் மேனன் இயக்கத்தில் அச்சம் என்பது மடமையடா படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
இந்தப் படத்தை தொடர்ந்து தமிழில் சில படங்களில் நடித்துவந்த மஞ்சிமா மோகன், நடிகர் கௌதம் கார்த்திக்கை காதலித்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்துக் கொண்டார்.
சாதாரணமாகவே குண்டாக காணப்படும் மஞ்சிமா மோகன், திருமணத்தின்போது மேலும் அதிக குண்டாக காணப்பட்டார்.
ஸ்லிம்மான மஞ்சிமா மோகன் :நடிகை மஞ்சிமா மோகன், தமிழில் அச்சம் என்பது மடமையடா என்ற படத்தின்மூலம் என்ட்ரி கொடுத்தவர். முதல் படத்திலேயே நடிகர் சிம்புவுக்கு ஜோடியாக கௌதம் மேனன் இயக்கத்தில் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்திருந்தது. முன்னதாக சில மலையாளப் படங்களில் நடித்திருந்த மஞ்சிமா மோகன், முதல் தமிழ் படத்திலேயே ஏராளமான ரசிகர்களை கவர்ந்தார். தொடர்ந்து தமிழில் அடுத்தடுத்த படங்களில் நடித்தார்.
கடந்த 1997ம் ஆண்டில் வெளியான மலையாளப் படமான கலியூஞ்சல் என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து தன்னுடைய சினிமா பயணத்தை துவக்கினார் மஞ்சிமா மோகன். தொடர்ந்து கடந்த 2015ம் ஆண்டில் வெளியான வடக்கன் செல்பி படத்தில் நிவின் பாலி ஜோடியாக நடித்து நாயகியாக தன்னுடைய பயணத்தை துவங்கினார், தமிழில் தொடர்ந்து சத்ரியன், இப்படை வெல்லும் போன்ற படங்களில் நடித்த மஞ்சிமா மோகன், நடிகர் கவுதம் கார்த்திக்கை காதலித்தார்.
தேவராட்டம் என்ற படத்தில் இவர்கள் இருவரும் இணைந்து நடித்த நிலையில், அவர்களுக்குள் காதல் ஏற்பட்டதாக முன்னதாக கூறப்பட்டது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவர்களது திருமணம் பிரம்மாண்டமாக, திரையுலக பிரபலங்கள் சூழ நடைபெற்றது. இந்நிலையில் இவர்கள் இருவரும் தங்களது வாழ்க்கையை மிகவும் இனிமையாக்கி வருகின்றனர். அவ்வப்போது இவர்கள் வெளியிடும் புகைப்படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றன.
திருமணத்தின்போது கூட மிகுந்த குண்டாக இருந்த மஞ்சிமா மோகனை பலரும் உருவ கேலி செய்த நிலையில், அவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசிய மஞ்சிமா, தன்னால் எப்போது நினைத்தாலும் உடல் எடையை குறைக்க முடியும் என்று தெரிவித்திருந்தார். திருமணத்தை தொடர்ந்து இவர் தன்னுடைய உடல் எடையை குறைக்கத் துவங்கிய நிலையில், தற்போது உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாகியுள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு தன்னுடைய க்யூட் வீடியோவை இவர் வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில் தற்போது எடைகுறைத்த புதிய புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்தப் புகைப்படத்தில் அவர் மிகவும் க்யூட்டாக, அவரது வழக்கமான சிரிப்புடன் காணப்படுகிறார். திருமணத்திற்கு பிறகு படங்களில் நடிப்பதை நிறுத்தியுள்ளார் மஞ்சிமா மோகன். தற்போது உடல் எடையை குறைத்த நிலையில், அவர் மீண்டும் படங்களில் நடிப்பாரா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.