Meena – கல்யாணத்துக்கு முதல் நாள் மீனா செஞ்ச காரியம்.. வேற லெவலா இருக்கே

சென்னை: Meena (மீனா) திருமணத்துக்கு முதல் நாள் மீனா செய்த காரியம் குறித்து இயக்குநர் சேரன் பேசியிருக்கிறார்.

குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் அறிமுகமானவர் மீனா. குழந்தை நட்சத்திரமாக இருக்கும்போதே ஏறத்தாழ 30க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துவிட்டார். இதன் காரணமாக மீனா எல்லோருக்கும் பரிச்சயமானவராக மாறிவிட்டார். அதன் பிறகு தமிழில் ராஜ் கிரண் நடித்த என் ராசாவின் மனசிலே படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் மீனா. அந்தப் படம் மெகா ஹிட்டானது. குறிப்பாக மீனா சோலையம்மா என்ற கதாபாத்திரத்தில் கலக்கியிருந்தார்.

கனவுக்கன்னி மீனா: என் ராசாவின் மனசிலே படத்துக்கு பிறகு மீனாவுக்கு தமிழில் ஏகப்பட்ட வாய்ப்புகள் கிடைத்தன. அதனை சரியாக பயன்படுத்திக்கொண்ட அவர் ரஜினி, கமல், சரத்குமார்,சத்யராஜ் உள்ளிட்ட பல ஹீரோக்களுடன் நடித்தார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் ரவுண்டு கட்டி நடித்தார் மீனா. இதன் காரணமாக பல வருடங்கள் தென் மாநிலங்களின் கனவுக்கன்னியாக ஜொலித்தார்.

ரஜினி கெமிஸ்ட்ரி: மீனா எத்தனை ஹீரோக்களுடன் நடித்திருந்தாலும் ரஜினியுடன் அவருக்கு இருந்த கெமிஸ்ட்ரி மற்ற ஹீரோக்களிடம் குறைவாகவே இருந்ததாக பெரும்பாலான ரசிகர்கள் கூறினர். இருவரும் நடித்த எஜமான், வீரா, முத்து உள்ளிட்ட படங்கள் மெகா ஹிட்டாகின. ரஜினிக்கு மீனா ஜோடியாக நடிக்கும் முன்பே குழந்தை நட்சத்திரமாக அவருடன் அன்புள்ள ரஜினிகாந்த் படத்திலும் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

திருமணம்: தொடர்ந்து முன்னணி நடிகையாக வலம் வந்த மீனா வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இந்தத் தம்பதிக்கு நைனிகா என்ற பெண் குழந்தை இருக்கிறார். அவர் விஜய்யுடன் தெறி படத்தில் நடித்தார்.மகிழ்ச்சியாக சென்று கொண்டிருந்த திருமண வாழ்க்கையில் வித்யாசாகர் மரணத்தை மீனா எதிர்பார்க்கவில்லை. இதன் காரணமாக மீனா சோகத்தின் உச்சத்துக்கே சென்றார். தொடர்ந்து அவருடன் நடித்தவர்கள் மீனாவை தேற்ற இப்போது இயல்பு நிலைக்கு திரும்பியிருக்கிறார்.

மீனா 40: இந்நிலையில் மீனா திரையுலகில் நுழைந்து 40 வருடங்கள் நிறைவடைந்ததையொட்டி அவருக்கு மீனா 40 என்ற நிகழ்ச்சியை தனியார் ஊடகம் ஒன்று நடத்தியது. அந்த நிகழ்ச்சியில் ரஜினிகாந்த், பாக்யராஜ், ராஜ்கிரண், சேரன், கே.எஸ்.ரவிக்குமார், ராதிகா, ரோஜா, பிரசன்னா, சினேகா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சிகாக இரண்டு மணி நேரத்திற்கு மீனாவுக்கு பத்து லட்சம் ரூபாய்வரை கொடுக்கப்பட்டதாகவும் ஒரு பேச்சு ஓடியது குறிப்பிடத்தக்கது.

சேரன் பேச்சு: நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சேரன் பேசுகையில், “பொற்காலம் படத்தில் மீனா நடித்தபோது அவரது பிறந்தநாளை கருவேலங்காட்டில் வைத்து கொண்டாடினோம்.அதை அவர் மறக்கமாட்டார். அதேபோல் பொக்கிஷம் படத்தை எடுத்தபோது பத்மப்ரியாவுக்கு யாரை டப்பிங் பேச வைக்கலாம் என யோசித்து ஆடிஷன் வைத்தேன். யார் பேசியதும் எனக்கு திருப்தி அளிக்கவில்லை.ஏனென்றால் படம் முழுக்க முழுக்க கடிதத்தை சம்பந்தப்பட்டது. எனவே தமிழை மிக அழகாக பேச வேண்டும்.

மீனா எண்ட்ரி: அந்த சமயத்தில் நடிகை மீனா என் நியாபகத்துக்கு வந்தார். சரி அவரிடம் கேட்கலாம் என நினைத்தபோது ஒன்று எனக்கு தோன்றியது. அது என்னவென்றால் இரண்டு நாள்களில் அவருக்கு திருமணம். இந்த சமயத்தில் கேட்டால் திட்டுவாரோ என யோசித்தே அவரது அம்மாவிடம் விஷயத்தை சொன்னேன். அவர் ஃபோனை மீனாவிடம் கொடுத்துவிட்டார். அவரிடமும் விஷயத்தை சொன்ன பிறகு எங்கே சேரன் டப்பிங் என கேட்டுவிட்டு நாளை திருமணத்தை வைத்துக்கொண்டு இன்று மாலை வந்து முழு படத்துக்கும் டப்பிங் பேசிக்கொடுத்துவிட்டு சென்றார். அவர் அப்படி செய்வதற்கு ஒரே காரணம் மீனா ஒரு கலை காதலர்” என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.