சென்னை: Sivakarthikeyan (சிவகார்த்திகேயன்) கோலிவுட்டில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்கள் பட்டியலில் தனுஷை சிவகார்த்திகேயன் பின்னுக்கு தள்ளியிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
சின்னத்திரையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பாளராக கலந்துகொண்டு டைட்டிலை வென்றவர் சிவகார்த்திகேயன். அதன் பிறகு அதே சேனலில் நடந்த மற்ற நிகழ்ச்சிகளில் தொகுப்பாளர் பணியை செய்தார். சிவகார்த்திகேயன் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிகள் அனைத்தும் கலகலப்புக்கு பஞ்சம் இல்லாமல் சென்றது. இதன் காரணமாக தமிழ்நாட்டு மக்களின் மனதில் எளிதாக இணைந்தா சிவா.
மேடை ஏறிய சிவா: அரங்கங்களுக்குள் ஆங்கரிங் செய்துகொண்டிருந்த சிவகார்த்திகேயன் விஜய் அவார்ட்ஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியதன் மூலம் முதல்முறையாக பெரிய மேடை ஏறினார். அந்த மேடையிலும் தனது ரைமிங், டைமிங் காமெடிகளால் செலிபிரிட்டிகளை கவர்ந்தார். குறிப்பாக வைரமுத்துவை மேடையில் வைத்துக்கொண்டு அவரைப்போன்ற குரலிலேயே பேசியது எல்லாம் க்ளாப்ஸ் ரகம். தொடர்ந்து அவரது திறமையை கவனித்த தனுஷ் 3 படத்தின் மூலம் நடிகராக அறிமுகப்படுத்தினார்.
ஹீரோ சிவா: அதனையடுத்து இயக்குநர் பாண்டிராஜ் மெரினா படத்தின் மூலம்ச் சிவகார்த்திகேயனை கதாநாயகனாக அறிமுகம் செய்தார். தொடர்ந்து கமர்ஷியல் படங்களில் நடித்த அவரை சுற்றி ஏகப்பட்ட விமர்சனங்கள் எழுந்தாலும் அதையெல்லாம் காதில் போட்டுக்கொள்ளாமல் திறமையை மட்டும் தொடர்ந்து வளர்த்துக்கொண்டே இருந்தார். அதன் காரணமாக பல மேடைகளில் இப்போது ஏறிக்கொண்டிருக்கிறார்.
100 கோடி ரூபாய் வசூல்: குறிப்பாக அவர் நடித்த டாக்டர் படமும், டான் படமும் வரிசையாக நூறு கோடி ரூபாயை வசூலித்தது. இதன் காரணமாக அவர் இப்போது கோலிவுட்டின் டாப் 5 ஹீரோக்கள் லிஸ்ட்டில் இருக்கிறார். கடைசியாக நடித்த பிரின்ஸ் படம் அடி வாங்கினாலும் ஜூலை 14ஆம் தேதி வெளியாகவிருக்கும் மாவீரன் படத்தின் மீது எஸ்கே ரசிகர்களுக்கு மிகப்பெரிய நம்பிக்கை இருக்கிறது. படத்தை மடோன் அஸ்வின் இயக்கியிருக்கிறார்.
அதிக சம்பளம்: இந்நிலையில் கோலிவுட்டில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்கள் பட்டியலில் சூர்யா மற்றும் தனுஷை பின்னுக்கு தள்ளியிருப்பதாக தகவல் ஒன்று வட்டமடித்துக்கொண்டிருக்கிறது. அதாவது டாக்டர், டான் ஆகிய படங்கள் தொடர்ந்து நூறு கோடி ரூபாய் வசூலித்ததால் சிவாவுக்கு 35 கோடி ரூபாய்வரை சம்பளம் கொடுக்கப்படுகிறதாம். அதேசமயம் தோல்வி முகத்தில் இருக்கும் தனுஷுக்கு 25 கோடி ரூபாய்வரைதான் சம்பளமாக கொடுக்கப்படுகிறது என கூறப்படுகிறது.
அதேசமயம் இந்தத் தகவல் எந்த அளவுக்கு உண்மை என தெரியவில்லை. இதற்கிடையே அதிக சம்பளம் வாங்குபவர்களில் முதலிடத்தில் விஜய் (150 கோடி ரூபாய்க்கும் மேல்), இரண்டாம் இடத்தில் ரஜினிகாந்த் (100 கோடி ரூபாய்க்கும் மேல்) மூன்றாம் இடத்தில் அஜித் (90 கோடி ரூபாய்) நான்காம் இடத்தில் கமல் ஹாசன் (80 கோடி ரூபாய்) இருக்கின்றனர் என்றும் ஒரு தகவல் ஓடிக்கொண்டிருக்கிறது.
சிவாவின் அடுத்த படம்: சிவகார்த்திகேயன் மாவீரன் படத்துக்கு பிறகு கமல் ஹாசன் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கிறார். அந்தப் படத்துக்கான ஷூட்டிங் சமீபத்தில் காஷ்மீரில் தொடங்கியது. ஆனால் அங்கு ஏற்பட்ட சில சிக்கல்களால் ஷூட்டிங்கை நிறுத்திவிட்டு படக்குழு தமிழ்நாடு திரும்பியிருப்பது குறிப்பிடத்தக்கது.