தமிழ்நாடு
கோடை விடுமுறை முடிந்து 6 முதல் 12ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு பள்ளிகள் இன்று திறக்கப்பட்டுள்ளன. சென்னை விருகம்பாக்கம் ஜெய்கோபால் கரோடியா அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு இனிப்பு, மலர் கொடுத்து வரவேற்பு அளிக்கப்பட்டது.காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தண்ணீர் திறந்து விடுகிறார். இதன்மூலம் 19வது முறையாக ஜூன் 12ல் தண்ணீர் திறக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.தமிழகத்தில் இருந்து ஒரு பிரதமரை உருவாக்குவோம் என அமித்ஷா பேசியிருப்பது மக்களை ஏமாற்றுவதற்கான செயல் என்று திருவள்ளூரில் விசிக தலைவர் திருமாவளவன் பேட்டி அளித்துள்ளார்.
தி.மு.க-வின் குடும்ப ஆட்சியை விமர்சிக்கும் அமித்ஷா
தமிழகம் – கர்நாடகா இடையே கனரக வாகன போக்குவரத்து 11 மணி நேரத்திற்கு பிறகு தொடங்கியது. முன்னதாக அந்தியூர் – பர்கூர் மலைப்பாதையில் சேலத்திற்கு மரங்கல் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானதால் கனரக வாகன போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட 10 வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பு இன்று தொடங்கியது. சுமார் 300க்கும் மேற்பட்ட வனத்துறை ஊழியர்கள் ஈடுபட்டுள்ள இந்த கணக்கெடுப்பு பணி, 6 நாட்கள் நடக்க உள்ளது.சென்னை சவுகார்பேட்டையில் உள்ள வணிக வளாகம் அருகே உள்ள டிரான்ஸ்பார்மர் திடீரென எரிந்து, அருகில் உள்ள துணிக்கடைக்கு தீ பரவியது. 2 மணி நேர போராட்டத்துக்கு பின் தீ அணைக்கப்பட்டது.
இந்தியா
ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்காக உள்ளூர் மக்கள் மொட்டை அடித்து சடங்கு செய்தனர்.புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை இயக்குநராக உள்ள ராகேஷ் அகர்வால் மாற்றப்படுகிறார். ஜூலை 31ஆம் தேதிக்குள் தகுதி உடைய மருத்துவர்கள் விண்ணப்பிக்கலாம் என ஜிப்மர் இணையத்தில் அறிவிப்பாணை வெளியாகியுள்ளது.
உலகம்
பிரதமர் மோடியின் அமெரிக்க பயணத்தை முன்னிட்டு, நியூ ஜெர்சி மாகாணத்தில் உள்ள ஓட்டலில் ’மோடி ஜி’ என்ற மீல்ஸ் உணவை இந்தியா வம்சாவளியை சேர்ந்த ஸ்ரீபட் குல்கர்னி அறிமுகம் செய்துள்ளார்.
வர்த்தகம்
சென்னையில் 387வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை. ஒரு லிட்டர் பெட்ரோல் 102.63 ரூபாய்க்கும், டீசல் விலை 94.24 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
விளையாட்டு
ஜப்பானில் நடைபெற்ற மகளிர் ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியில் முதல்முறையாக வெற்றி பெற்று இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. இறுதிப் போட்டியில் தென்கொரியாவை 2 – 1 என்ற கோல்கணக்கில் வீழ்த்தியது.பிரெஞ்சு ஓப்பன் டென்னிஸ் போட்டியின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நார்வே வீரர் கேஸ்பர் ரூட்டை வீழ்த்தி 3வது முறையாக செர்பிய வீரர் நவோக் ஜோகோவிச் சாம்பியன் பட்டம் வென்றார். இதன்மூலம் அதிக கிராண்ட் ஸ்லாம் பட்டம் (23) வென்ற வீரர் என்ற புதிய சாதனையை படைத்துள்ளார்.