நியூ ஜெர்சி: பிரதமர் மோடி, வரும் 22ம் தேதி அமெரிக்கா செல்ல உள்ள நிலையில், நியூ ஜெர்சியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் ‘மோடி ஜி மீல்ஸ்’ (மோடி ஜி தாளி) என்னும் இந்திய உணவு வகைகளை உள்ளடக்கிய தொகுப்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி, வரும் 22ம் தேதி அமெரிக்கா செல்ல உள்ளார். அந்நாட்டு அதிபர் ஜோ பைடனை சந்தித்து இரு நாடுகளுக்கிடையேயான பரஸ்பரம் நட்புறவு குறித்து பேச உள்ளார்.
இந்த நிலையில் அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் ஹோட்டல் ஒன்றை இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஸ்ரீபாத் குல்கர்னி என்பவர் நடத்தி வருகிறார். அங்கு வசிக்கும் இந்திய சமூகத்தின் கோரிக்கையின் பேரில் ‘மோடி ஜி மீல்ஸ்’ என்னும் இந்திய உணவுகள் தொகுப்பை அறிமுகப்படுத்தியுள்ளார் குல்கர்னி.
அந்த தொகுப்பில், இந்தியாவின் பன்முகத்தன்மையைப் பிரதிபலிக்கும் வகையில் கிச்சடி, ரஸகுல்லா, சர்சன் கா சாக், காஷ்மீரி டம் ஆலு, இட்லி, டோக்லா, சாச் மற்றும் அப்பளம் என பலவித பதார்த்தங்கள் உள்ளன.
மேலும், இந்திய அரசாங்கத்தின் பரிந்துரையின் பேரில், ஐக்கிய நாடுகள் சபை 2023ம் ஆண்டை சர்வதேச சிறுதானிய ஆண்டாக அறிவித்தது. இதனை சாதனையாக கொண்டாடவும், சிறுதானிய உணவு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், ஶ்ரீபாத் குல்கர்னியின் ஹோட்டலில் சிறுதானியங்களை பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட உணவுகளை வழங்கப்படுகிறது.
வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பெயரில் மற்றொரு சிறப்பு இந்திய உணவை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளதாக ஶ்ரீபாத் குல்கர்ணி கூறியுள்ளார். அவர் கூறுகையில், ‘மோடி ஜி தாளி’ பிரபலமடையும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். இதற்குப் பின் ஜெய்சங்கர் தாளியைத் துவங்கவும் திட்டமிட்டுள்ளோம். ஏனெனில் அவருக்கும் இந்திய அமெரிக்க சமூகத்தில் ஈர்ப்பு உள்ளது’ என அவர் கூறுகிறார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement