சென்னை : நடிகர் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோபா படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் சூட்டிங், இம்மாதத்திற்குள் நிறைவடையவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இந்தப் படத்தின் பிரம்மாண்ட பாடல் காட்சி தற்போது படமாக்கப்பட்டு நிறைவடைந்துள்ளது. விஜய்யின் தரை லோக்கலாக இந்தப் பாடல் உருவாகியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இந்தப் பாடலை தொடர்ந்து அடுத்ததாக படத்தின் க்ளைமாக்ஸ் காட்சிகள் படமாக்கப்பட உள்ளன. இதற்காக சென்னையில் பிரம்மாண்ட செட் அமைக்கும் பணிகள் தற்போது நடந்து வருகின்றன.
ட்ரெண்டிங்கில் விஜய் பிறந்தநாள் : நடிகர் விஜய் மற்றும் த்ரிஷா 14 ஆண்டுகளுக்கு பிறகு இணைந்துள்ள படம் லியோ. இந்தப் படத்தில் மேலும் கௌதம் மேனன், சஞ்சய் தத், மிஷ்கின், பிரியா ஆனந்த், அர்ஜூன் உள்ளிட்டவர்களும் முக்கியமான ரோல்களில் நடித்து வருகின்றனர். இந்தப் படத்தில் விஜய் கேங்க்ஸ்டராக களமிறங்கியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. படத்தின் சூட்டிங் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், வரும் அக்டோபர் 19ம் தேதி படம் சர்வதேச அளவில் ரிலீசாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
காஷ்மீரை தொடர்ந்து தற்போது சென்னையில் லியோ படத்தின் சூட்டிங் நடந்து வருகிறது. தற்போது பாடல் காட்சி சூட்டிங் எடுத்து முடிக்கப்பட்டுள்ள நிலையில், அடுத்ததாக க்ளைமாக்ஸ் காட்சிகளை இயக்குநர் லோகேஷ் திட்டமிட்டுள்ளார். இதற்கான பிரம்மாண்ட செட் அமைக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. விரைவில் இதன் சூட்டிங் துவங்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. படத்தின் சூட்டிங் நிறைவடையவுள்ள நிலையில், அடுத்தடுத்த அப்டேட்களை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
இதனிடையே வரும் ஜூன் 22ம் தேதி நடிகர் விஜய்யின் பிறந்தநாளையொட்டி படத்தின் சிறப்பு கிளிம்ப்ஸ் காட்சிகள் வெளியாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. தொடர்ந்து அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் இணையும் தளபதி 68 படத்தின் டைட்டிலும் அவரது பிறந்தநாளையொட்டி வெளியாகவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் விஜய் பிறந்தநாளை கொண்டாட தற்போது முதலே ரசிகர்கள் தயாராகி விட்டனர்.
அவரது பிறந்தநாளின் சிறப்பு காமன் டிபி தற்போது வெளியாகியுள்ளது. மேலும் அடுத்தடுத்த விஜய்யின் வீடியோக்களையும் ரசிகர்களை பகிர்ந்து வருகின்றனர். இதனிடையே, #AdvHBDdearThalapathyVijay என்ற ஹேஷ்டேக்கும் தொடர்ந்து ட்விட்டரில் ட்ரெண்டிங்கில் உள்ளது. இதனிடையே இந்தப் படத்தின் சூட்டிங் இன்னும் ஒரு வாரத்தில் நிறைவடையவுள்ளதாக படக்குழு அப்டேட் தெரிவித்துள்ளது. படத்தின் க்ளைமாக்ஸ் காட்சிகள் படமாக்கப்படவுள்ள நிலையில், இன்னும் ஒருவாரத்தில் ஒட்டுமொத்த சூட்டிங்கும் நிறைவடையவுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் விஜய்யின் பிறந்தநாளை திருவிழாவாக அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் தற்போது இன்னும் 10 நாட்கள் உள்ள நிலையிலேயே, கொண்டாட்டத்திற்கு தயாராகியுள்ளனர். தற்போதே காமன் டிபியை வெளியிட்டுள்ள ரசிகர்கள், லியோ மற்றும் தளபதி 68 படங்களின் அப்டேட்களுடன் அவரது பிறந்தநாளை கொண்டாடி மகிழவும் காத்திருக்கின்றனர். அந்த வகையில் விஜய்யின் 49வது பிறந்தநாளும் களைகட்டும் என்று எதிர்பார்க்கலாம்.