சென்னை: விஜய் – அஜித் இருவருமே கோலிவுட்டின் டாப் ஹீரோக்களாக வலம் வருகின்றனர்.
ஒரே காலக்கட்டத்தில் சினிமாவில் அறிமுகமான இருவரும் இன்று விஸ்வரூபம் எடுத்து நிற்க அவர்களது உழைப்பும் ரசிகர்களுமே காரணம்.
இந்நிலையில், கடந்த சில வருடங்களாக விஜய்யின் வளர்ச்சி பல மடங்காக பெருகிவிட்டது.
இதற்கான காரணம் குறித்தும் அஜித்தின் சினிமா கேரியர் பற்றியும் சில தகவல்கள் கிடைத்துள்ளன.
விஜய் மாதிரி அஜித்துக்கு இன்ட்ரஸ்ட் இல்லை: விஜய், அஜித் இருவருமே 1990களின் காலக்கட்டத்தில் தங்களது சினிமா கேரியரை தொடங்கினார்கள். ராஜாவின் பார்வையிலே படத்தில் இணைந்து நடித்த இருவரும், அதன் பின்னர் தனித்தனி ரூட்டுக்குள் பயணிக்கத் தொடங்கினர். ஆரம்பத்தில் காதல் பின்னணியில் நடித்து பிரபலமானதும், பின்னர் ஆக்ஷன் ஹீரோ ரேஸில் களமிறங்கினர்.
விஜய், அஜித் இருவரது கேரியரும் ஒரேமாதிரியாகவே உச்சம் தொட்டது. ஒருசில படங்கள் தோல்வியடைந்தாலும் இவர்களின் வெற்றிப் பயணத்தை யாராலும் தடுக்க முடியவில்லை. அதேநேரம் விஜய், அஜித் இருவரது உழைப்பையும் கடந்து அவர்களது ரசிகர்கள் தான் பெரும் பலமாக இருந்தனர். ஆனால், அஜித் ஒருகட்டத்தில் தனது ரசிகர் மன்றங்களை கலைத்துவிட்டார்.
ரசிகர்கள் தனக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் அவர்களின் குடும்பத்தை முதலில் பார்க்க வேண்டும் என ஆர்டரும் போட்டுவிட்டார். ஆனாலும் இன்று வரையில் அஜித்தின் ரசிகர்கள் அவரை விட்டுக்கொடுக்காமல் கொண்டாடி வருகின்றனர். ரசிகர் மன்றங்களே இல்லாமல் மாஸ் ஹீரோவாக வலம்வந்து கொண்டிருக்கிறார் அஜித். இன்னொரு பக்கம் விஜய் வேற லெவலில் மாஸ் காட்டி வருகிறார்.
கடந்த சில வருடங்களாகவே விஜய் தான் பாக்ஸ் ஆபிஸ் கிங் என சொல்லப்படுகிறது. சூப்பர் ஸ்டார் ரஜினி, கமல், அஜித், சூர்யா, விக்ரம், தனுஷ் என பல முன்னணி நடிகர்களுக்கு மத்தியிலும் விஜய் படங்களுக்கு நல்ல ஓபனிங் இருப்பதை பார்க்க முடிகிறது. அதுமட்டும் இல்லாமல் விரைவில் அரசியலில் களமிறங்கலாம் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள பிரபல சினிமா செய்தியாளர் ஒருவர், விஜய்யின் வளர்ச்சி குறித்து சில உண்மைகளை போட்டுடைத்துள்ளார். அதில் விஜய் தன்னை ப்ரமோட் செய்துகொள்வதற்காக மிகப் பெரிய சோஷியல் டீம், PRO டீம் இரண்டையும் வைத்துள்ளார். இதில் பலரும் விஜய்க்காக வேலை செய்துகொண்டிருக்கின்றனர். அவரது படங்கள் பற்றிய அப்டேட்ஸ், பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் உட்பட பல தகவல்கள் அவர்களால் தான் ட்ரெண்ட் செய்யப்படுகின்றன என்றுள்ளார்.
மேலும், விஜய் படம் வெளியாகும் போது ரசிகர்களை பார்க்க வைப்பதற்காக பக்காவாக பூஸ்ட் அப் செய்து அவர்களே பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் ரிப்போர்ட்டையும் ஷேர் செய்வார்கள் என கூறியுள்ளார். ஆனால், அஜித்துக்கு எப்போதும் இதுமாதிரியான விஷயங்களில் ஈடுபட மாட்டார். அவருக்கு எல்லாமே அவரது மேனேஜர் சுரேஷ் சந்திரா மட்டுமே. அவர் தான் அஜித்தின் அனைத்துவிதமான அபிஸியல் அப்டேட்களையும் வெளியிடுவார் என தெரிவித்துள்ளார்.
ஆனால், விஜய் இதற்காகவே தனியாக டீம் போட்டு அவர்களுக்கு சம்பளம் கொடுத்து வேலை வாங்குவதாக கூறியுள்ளார். மேலும், இனி விஜய் தான் கோலிவுட்டின் நம்பர் 1 ஸ்டாராக வலம் வருவார். அவருக்கென தனி ரசிகர் பட்டாளம் இருப்பதால் இனி விஜய்யை பக்கத்தில் நெருங்கவே முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.