அரபிக் கடலில் உருவான பிபர்ஜாய் புயல் அதிதீவிர புயலாக வலுப்பெற்றது. இந்தப் புயல் குஜராத்தின் கட்ச் மாவட்டத்தில் 15ஆம் தேதியான வியாழக்கிழமை கரையை கடக்கும் என முன்னதாக கூறப்பட்டது. இந்த புயலால் குஜராத் மாநிலத்தின் கடலோர பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. நேற்று குஜராத்தின் சவுராஷ்டிரா மற்றும் கட்ச் மாவட்டங்களில் ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
மேலும் குஜராத்தின் கடற்கரை ஓட மாவட்டங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். குஜராத்தின் நான்கு மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே பிபர்ஜாய் புயல் குறித்து மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் பிரதமர் மோடி உயர்மட்டக் குழு ஆலோசனை நடத்தினார்.
ஹன்சிகாவுக்கு நடந்த அநியாயம்… டிரெஸ் கொடுக்க மறுத்த டிசைனர்கள்!
இந்நிலையில் அதிதீவிர புயலான பிபோர்ஜோய் தற்போது தீவிர புயலாக வலுவிழந்தாக இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது. இது இன்று அதிகாலை நிலவரப்படி பிபர்ஜாய் புயல் வடக்கு நோக்கி மணிக்கு ஐந்து கிலோமீட்டர் வேகத்தில் நகர்வதாகவும் வானிலை மையம் கூறியுள்ளது.
மேலும் பிபர்ஜாய் புயல் குஜராத்தின் போர்பந்தரில் இருந்து தென்மேற்கே சுமார் 290 கிமீ தொலைவில் மையம் கொண்டுள்ளது. இது குஜராத்தின் சௌராஷ்டிரா மற்றும் கட்ச் பகுதிகள் மற்றும் அதை ஒட்டிய பாகிஸ்தான் கடற்கரையை வியாழக்கிழமை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மக்களின் குரல் கேட்குதா? தமிழக அரசை சரமாரியாக விளாசிய அன்புமணி ராமதாஸ்!
பிபர்ஜாய் புயல் காரணமாக குஜராத்தின் கடலோர மாவட்டங்கள் மற்றும் மும்பை உட்பட மகாராஷ்டிரா மாநிலத்தின் சில பகுதிகளிலும் பலத்த மழை பெய்து வருகிறது. மேலும் மேற்கு கடற்கரை பகுதிகள் பலத்த கொந்தளிப்புடன் காணப்படுகின்றனர். அலையின் சீற்றமும் அதிகமாக உள்ளது.
பிபர்ஜாய் புயலை முன்னிட்டு இந்திய ரயில்வேயும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்களை மேற்கொண்டுள்ளது. மண்டல ரயில்வே தலைமையகத்தில் பேரிடர் மேலாண்மை அறையை திறக்க ரயில்வே திட்டமிட்டுள்ளது. பல்வேறு துறைகளின் ஊழியர்கள் 24 மணி நேரமும் பேரிடர் மேலாண்மை அறையில் இருப்பார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அம்மாடியோ… ஒரே அடியாக சம்பளத்தை உயர்த்திய சமந்தா… எத்தனை கோடி பாருங்க!
மேலும் பாவ்நகர், ராஜ்கோட், அகமதாபாத் மற்றும் காந்திதாமில் உள்ள பிரிவு தலைமையகத்தில் அவசரகால கட்டுப்பாட்டு அறைகள் இயங்கும் என்றும் இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது. காற்றின் வேகமும் தொடர்ந்து கண்காணிக்கப்படும் என்றும் மணிக்கு 50 கிலோ மீட்டர் வேகத்திற்கு மேல் காற்றின் வேகம் இருந்தால் ரயில்களை ஒழுங்குப்படுத்தவும் நிறுத்தவும் அனிமீட்டர்களை ரயில்வே பொருத்தியுள்ளது.