அரசிடம் இருந்து உதவி பெற்று தொழில் தொடங்கும் இளைஞர்கள், மேலும் பல இளைஞர்களுக்கு வேலை வழங்கி வருவதாக பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
மத்திய அரசு நடத்தி வரும் வேலைவாய்ப்பு திருவிழாவின் ஒரு பகுதியாக 70 ஆயிரத்து 126 பேருக்கு பணி நியமன ஆணைகளை நாடு முழுவதும் 43 இடங்களில் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியை டெல்லியில் இருந்து காணொளி மூலமாக பிரதமர் மோடி துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், 10 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட நாடு தற்போது நிலையாக உள்ளதாகவும், அடுத்த 25 ஆண்டுகளில் பெரும் வளர்ச்சியடையும் எனவும் கூறினார்.
இளைஞர்களின் எதிர்காலத்தை பாதுகாக்கும் வகையில் அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்த அவர், அவர்களின் கனவுகளையும் விருப்பங்களையும் நிறைவேற்றும் வகையில் அரசு செயல்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.