டெக்ஸாஸ் ஆயிரக்கணக்கான மீன்கள் டெக்ஸாஸ் கடற்கரையில் செத்து மிதந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்காவில் டெக்ஸாஸ் மாகாணத்தில் உள்ள வளைகுடா கடற்கரையில் திடீரென ஆயிரக்கணக்கான மீன்கள் செத்து மிதந்தன. எல்லா மீன்களும் செத்துக் கரை ஒதுங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையொட்டி கடல்சார் நிபுணர்கள் மற்றும் உள்ளூர் அதிகாரிகள் அந்த பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வில் வெதுவெதுப்பான நீரே இவ்வளவு மீன்களின் இறப்புக்குக் காரணம் என்பது தெரிய வந்தது. பொதுவாகக் குளிர்ந்த நீரில் அதிக அதிக ஆக்ஸிஜன் இருக்கும்; அதே வேளையில் வெதுவெதுப்பான […]