பெண்கள் சார்ந்த வளர்ச்சித் திட்டங்கள், நிலையான வளர்ச்சி இலக்குகள் சார்ந்த முதலீடு உள்ளிட்டவற்றை ஜி 20 அமைச்சர்கள் மாநாட்டின் இரண்டாவது நாளான நேற்று பிரதமர் மோடி காணொலி வாயிலாக வலியுறுத்தியுள்ளார்.
வாரணாசியில் நடைபெற்ற ஜி 20 வெளியுறவு அமைச்சர்கள் மாநாட்டில் தமது கருத்துகளைப் பகிர்ந்துக் கொண்ட மோடி, நமது இலக்குகளில் பின்னடைவு ஏற்படாதிருக்க அனைவரும் கூட்டுப் பொறுப்பு ஏற்க வேண்டும் என்று கூறினார்.
தொழில்நுட்பத்தை ஜனநாயகப்படுத்துதல் மூலமாக மக்களிடையே காணப்படும் தகவல் இடைவெளியை சரிசெய்ய முடியும் என்றும் மோடி தெரிவித்தார்.
இந்தியாவில் தொழில்நுட்ப வளர்ச்சி புரட்சிகரமான மாற்றத்தை ஏற்படுத்தி இருப்பதாகவும் இந்தியா தனது அனுபவத்தை மற்ற நாடுகளுடன் பகிர்ந்துக் கொள்ளத் தயாராக இருப்பதாகவும் மோடி கூறியுள்ளார். .