இந்தோனேசியா,
இந்தோனேசியா ஓபன் பேட்மிண்டன் போட்டி ஜகார்த்தாவில் உள்ள இஸ்டோராவில் இன்று துவங்கி அடுத்த மாதம் ஜூன் 18 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.இந்த போட்டியில் இந்தியாவின் சார்பாக பிவி சிந்து, எச்.எஸ். பிரணாய் உட்பட பல வீரர்கள் ஜகார்த்தா சென்றுள்ளனர்.
இன்று நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் பிவி சிந்து முதல் சுற்றில் இந்தோனேசியா வீராங்கனை கிரேகேரியா மரிஸ்காவை எதிர்கொண்டார்.
பரபரப்பான இந்த ஆட்டத்தில் 21-16, 21-14, என்ற செட் கணக்கில் சிந்து வெற்றி பெற்றார். இதனால் பி.வி.சிந்து 2வது சுற்றுக்கு முன்னேறினார்.
Related Tags :