சென்னை : நான்காவது முறையாக பெண் குழந்தைக்கு அப்பாவான பிரபுதேவா மகிழ்ச்சியில் கோயில் கோயிலாக சென்று கடவுளுக்கு நேர்த்திக்கடன் செலுத்தி வருகிறார்.
பிரபு தேவா அக்னி நட்சத்திரம் திரைப்படத்தில் க்ரூப் டான்சர்களில் ஒருவராக இருந்தார். அதன் பிறகு ஷங்கர் இயக்கத்தில் வெளியான ஜென்டில்மேன் படத்தில் சிக்குப் புக்கு சிக்குப் புக்கு ரயிலே பாடலுக்கு நடனமாடி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார்.
அதன் பிறகு காதலன் படத்தில் முக்காலா முக்காபுலா பாடலில் வளைந்து தெளிந்து ஆடி கோலிவுட்டின் மைக்கல் ஜாக்சன் என பெயர் எடுத்தார்.
பிரபுதேவா : நடிகர், நடன அமைப்பாளர் மற்றும் திரைப்பட இயக்குநர் என பன்முகத் தன்மை கொண்டவராக இருக்கும் பிரபு தேவா என்றுமே மறக்கமுடியாத மாஸ் ஹிட் படங்களில் நடித்துள்ளார். மேலும், போக்கிரி, வில்லு, வெடி, எங்கேயும் காதல் உட்பட பல தமிழ் மற்றும் இந்தி திரைப்படங்களை இயக்கியுள்ளார்.
காதல் திருமணம் : பிரபுதேவா 1995 ஆம் ஆண்டு, தன்னுடைய டான்ஸ் ட்ரூப்பில் டான்ஸராக இருந்த ரமலத்தை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு மூன்று ஆண் குழந்தைகள் பிறந்தனர். ஆனால் பிரபுதேவாவின் மூத்த மகன் புற்றுநோய் கரணமாக 2008ம் ஆண்டு உயிரிழந்துவிட்டார்.
நயன்தாராவுடன் காதல் : இதையடுத்து, வில்லு படத்தை இயக்கிய போது நயன்தாரவை காதலித்து வந்தார். இருவரும் லிவ்விங்டூ ரிலேஷன் ஷிப்பில் இருந்தார். இது பிரபுதேவாவின் குடும்பத்தில் பெரிய பிரச்சனையாக வெடித்த நிலையில், பிரபு தேவா ரமலத்தை விவாகரத்து செய்து பிரிந்தார். இதன் பிறகு நயன்தாராவை பிரபு தேவா திருமணம் செய்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இருவரும் பிரிந்துவிட்டனர்.
பெண் குழந்தை பிறந்தது : இதையடுத்து, பிரபுதேவா முதுகு வலியால் அவதிப்பட்டு வந்த போது, அவருக்கு சிகிச்சை அளித்த பிசியோதெரபிஸ்ட் ஹிமானி சிங் என்பவரை திருமணம் செய்து கொண்டார். தற்போது இந்த தம்பதிக்கு அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. குழந்தை பிறந்து சில மாதங்களே ஆனநிலையில், இப்போது தான் இந்த செய்தி வெளியாகியுள்ளது.
கோயிலில் பிரபுதேவா : குழந்தை பிறந்த மகிழ்ச்சியில் இருக்கும் பிரபுதேவா தனது சொந்த ஊரான கர்நாடக மாநிலம் தொட்டபல்லாப்பூர் பகுதியில் உள்ள சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்துள்ளார். அப்போது இவரைப் பார்த்ததும் ரசிகர்கள் பலர் சூழ்ந்து கொண்டு செல்ஃபி எடுத்து அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.