ஜூன் மாதம் தொடங்கியிருந்தாலும் வெபத்தின் கொடுமை இன்னும் குறைந்தபாடில்லை. கொளுத்தும் வெயிலில் இருந்து விடுபட மக்கள் என்னென்னமோ வழிகளை தேடிக் கொண்டிருக்கின்றனர். பலர் தரமான ஏசிக்களை வாங்கி கொண்டிருக்கிறார்கள். நீங்களும் ஏசி வாங்க நினைத்தால், சிறந்த சலுகைகளை கொண்ட ஏசிக்களை இங்கே பார்க்கலாம். ஈ-காமர்ஸ் இணையதளமான ஃப்ளிப்கார்ட்டில் பல சலுகைகள் ஏசிக்களுக்கு கொடுக்கப்படுகிறது. இதன் மூலம் நீங்கள் குறிப்பிடத்தகுந்த பணத்தைச் சேமிக்கலாம். எலெக்ட்ரானிக் பொருட்களுக்கான தள்ளுபடியுடன் விலையில்லா EMI வசதியும் உள்ளது. இது மட்டுமின்றி, HDFC மற்றும் Kotak Mahindra போன்ற வங்கிகளும் தங்கள் அட்டைகள் மூலம் வாங்கும் போது 10% நேரடி தள்ளுபடி கொடுக்கப்படுகிறது.
ஸ்பிலிட் ஏசி பற்றி பேசுகையில், வாடிக்கையாளர்கள் இங்கிருந்து பிராண்டட் ஏசிகளை வாங்குவதில் பெரும் தள்ளுபடியைப் பெறுகிறார்கள். வாடிக்கையாளர்கள் Samsung Convertible 5 in 1 Cooling 2023 1.5 Ton Split மாடலை Flipkart-லிருந்து 41% தள்ளுபடியில் வீட்டிற்குக் கொண்டு வரலாம். இந்த ஏசியை ரூ.60,999-க்கு பதிலாக வெறும் ரூ.35,500க்கு வீட்டிற்கு கொண்டு வரலாம். எக்ஸ்சேஞ்ச் சலுகையின் கீழ் ரூ.4,500 தள்ளுபடியையும் பெறலாம். இந்த ஏசி 977.8W மின் நுகர்வுடன் வருகிறது. 111 முதல் 150 சதுர அடி வரையிலான அறைகளுக்கு சரியானது.
எல்ஜி கன்வெர்டிபிள் 6-இன்-1 கூலிங் 2023 மாடல் 1.5 டன் ஏசி 4 ஸ்டார் மதிப்பீட்டில் வருகிறது. இந்த ஸ்பிலிட் டூயல் இன்வெர்ட்டர் 4 வே ஸ்விங், எச்டி ஃபில்டருடன் வருகிறது. 51% தள்ளுபடிக்குப் பிறகு, வாடிக்கையாளர்கள் இந்த ஏசியை ரூ.81,889க்கு பதிலாக வெறும் ரூ.39,990க்கு வீட்டிற்கு கொண்டு வரலாம்.
1.5 டன் 3 ஸ்டார் ஸ்பிளிட் இன்வெர்ட்டர் ஏசியின் Flipkart 2023 வரம்பில் MarQ டர்போ கூல் தொழில்நுட்பத்துடன் வருகிறது. இதில், வாடிக்கையாளர்களுக்கு 45% தள்ளுபடி வழங்கப்படுகிறது. தள்ளுபடிக்குப் பிறகு, வாடிக்கையாளர் ரூ.52,999க்குப் பதிலாக ரூ.28,999- க்கு வீட்டுக்குக் கொண்டு வரலாம். எக்ஸ்சேஞ்ச் சலுகையின் கீழ், இந்த ஏசியை ரூ.4,500 தள்ளுபடியில் வாங்கலாம். இது 1620W மின் நுகர்வுடன் வருகிறது, மேலும் 1 வருட தயாரிப்பு உத்தரவாதம் மற்றும் 10 வருட கம்ப்ரசர் உத்தரவாதத்துடன் வருகிறது.