காஞ்சிபுரம் கம்மாள தெரு சந்திப்பில் தனியார் நிறுவன பேருந்தின் மீது இருசக்கர வாகனம் அதிவேகமாக மோதிய விபத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் ஒருவர் நிகழ்விடத்திலேயே பலியானார்.
உணவகம் ஒன்றில் பணியாற்றி வரும் காஞ்சிபுரம் காமாட்சி நகர் பகுதியை சேர்ந்த தினேஷ் என்ற இளைஞரும், சின்ன காஞ்சிபுரம் ஜீவானந்தம் தெருவை சேர்ந்த அவரது நண்பரான மற்றொரு தினேஷும் இரவு வெளியே சென்றுவிட்டு இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.
அப்போது கம்மாள தெரு சந்திப்பில் திரும்பிய தனியார் நிறுவன பேருந்தின் மீது இளைஞர்களின் இருசக்கர வாகனம் அதிவேகமாக மோதியது.
விபத்தில் காமாட்சி நகர் பகுதியை சேர்ந்த தினேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், அவரது நண்பர் தினேஷ் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.