சென்னை இந்தி மொழியில் அலுவல் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என சுற்றறிக்கை வெளியிட்டதற்கு நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனம் மன்னிப்பு கோரி உள்ளது. இந்தியாவின் பொதுக் காப்பீடு நிறுவனங்களில் முதன்மையில் உள்ள நிறுவனங்களில் நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனமும் ஒன்றாகும். இது எல் ஐ சி போல மத்திய அரசின் ஒரு அங்கமான நிறுவனமாகும். சமீபத்தில் நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனம் ஒரு சுற்றறிக்கையை அனுப்பி உள்ளது. அந்த சுற்றறிக்கையில், “ அனைத்து மண்டல அலுவலகங்களிலிருந்து தலைமை அலுவலகத்துக்கு அனுப்பப்படும் அறிக்கைகள் இந்தியில் மட்டுமே இருக்க […]