திருச்செந்தூர் அருகே முதலமைச்சர் காப்பீட்டு திட்ட அதிகாரி ஒருவர், தன் மேல்சட்டை பையில் வைத்திருந்த ஸ்மார்ட் ஃபோன் வெடித்து சிதறியதில், அவருக்கு நெஞ்சு பகுதியில் தீ காயம் ஏற்பட்டது.
தலைவன்வடலி பகுதியை சேர்ந்த இசக்கியப்பன், நெல்லை மாவட்டத்தில் முதலமைச்சர் காப்பீட்டு திட்ட மாவட்ட ஒருங்கிணைப்பாளராக உள்ளார்.
உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ள தனது உறவினரை காண இன்று காலை ஆறுமுகநேரி கணேசபுரம் சென்ற அவர் காலை உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது, மேல்சட்டை பையில் வைக்கப்பட்டிருந்த ஸ்மார்ட் ஃபோன் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது.
இதில் நெஞ்சு பகுதியில் தீக்காயம் அடைந்த இசக்கியப்பன் காயல்பட்டினம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வெடித்த ஸ்மார்ட் ஃபோன் இந்திய தயாரிப்பு எனக் கூறப்படுகிறது.