பிரபல வில்லன் நடிகர் கசான் கான் திடீர் மரணம்!

மலையாள சினிமாவில் பிரபலமான நடிகராக திகழ்ந்தவர் கசான் கான். இவர் தமிழில் பல படங்களில் வில்லனாக நடித்து மிரட்டியுள்ளார். இந்நிலையில் கசான் கான் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளதாக வெளியாகியுள்ள செய்தி ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள்
தமிழ் சினிமாவில் வில்லன், குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்துள்ளார் கசான் கான். செந்தமிழ் பாட்டு, கலைஞன், வேடன், சேதுபதி ஐபிஎஸ், என் ஆசை மச்சான், சிந்து நதி, டூயட், வல்லரசு உள்ளிட்ட பல படங்களில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகியுள்ளார்.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

நடிகர் விஜய்யுடன் பத்ரி, பிரியமானவளே படங்களில் நடித்துள்ளார். இதில் ‘பிரியமானவளே’ படத்தில் சிம்ரன் மீது ஆசைப்படும் முறை மாமாவாக நடித்திருந்த கசான் கான், 7 டைம்ஸ் 7 டைம்ஸ் என ஆம்ஸை உயர்த்தி காட்டும் காட்சி மிக பிரபலம். இவர் கடைசியாக மலையாளத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியாக ‘லைலா ஓ லைலா’ படத்தில் மட்டும் நடித்தார்.

Maaveeran: ‘மாவீரன்’ பட பாடல் ரெக்கார்டிங்கில் சண்டை போட்ட சிவகார்த்திகேயன் – அதிதி ஷங்கர்.!

அதன் பின்னர் சினிமாவை விட்டு விலகி கசான் கான் பிசினஸில் ஆர்வம் செலுத்தியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ள சம்பவம் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திரைத்துறையை சார்ந்த பலரும் கசான் கான் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Kamal Haasan: ‘இந்தியன் 2’ ஓவர்.. அஜித் பட இயக்குனருடன் கமல்: தீயாய் பரவும் புகைப்படம்.!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.